நாடு முழுவதும் மக்களை சந்தித்து உரையாட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ திட்டம்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மும்பை, ஆக. 8- அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் மக்களை சந்தித்து கலந்துரையாட முடிவு செய்திருப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

மராட்டிய மாநிலம், சத்ரபதிசம்பாஜிநகரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம், கட்சியின் நிறுவனத்தலைவர் அபிஜீத் திப்கே வீட்டில் கடந்த 2 நாளாக நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் எதிர் கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் நிறைவு பெற்றதைதொடர்ந்து 6.8.2026 அன்று அபிஜீத் திப்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறை கேடுகளுக்கு எதிராக கடந்த மாதம் டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாகவே, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டு விலகினார். இது மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

நாட்டில் தற்போது வேலையின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. இதனை நாடு தழுவிய பிரச்சாரமாக மாற்றி போராடுவோம். கல்வித்துறையில் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வர பாடுபடுவோம். இன்று கல்வி என்பது வியாபாரமாகி, ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. இதனை நாங்கள் மாற்றுவோம்.

‘பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்’ (கியாபோல் தி பப்ளிக்) என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளோம். அடுத்த மாதம்தொடங்க உள்ள இந்த பிரச்சாரம் மூலம் நாடு முழுவதும் மக்களை சந்தித்து கலந்துரையாட உள்ளோம். அப்போது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உள்ளோம். மேலும், அவர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித் தும் விரிவாகக் கேட்டறிய இருக்கி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *