பி.ஜே.பி.அரசின் சா(சோ)தனை! வேலையின்மை 5.10 சதவீதமாக அதிகரிப்பு

1 Min Read

புதுடில்லி, ஏப். 16- நாட்டில் வேலை யின்மை, கடந்த மார்ச் மாதத்தில் 5.10 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட் டுள்ள தரவுகளில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது, முந் தைய பிப்ரவரி மாதத்தில் 4.90 சதவீதமாக இருந்தது.

நகர்ப்புற வேலை யின்மை விகிதம் அதிக ரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இது, பிப்ர வரியில் 6.60 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் சில் 6.80 சதவீதமாக அதி கரித்துள்ளது.நகர்ப்புற ஆண்களிடையே வேலை யின்மை 6.10 சதவீதமாக வும்; பெண்களிடையே 9 சதவீதமாகவும் இருந்தது.

கிராமப்புற பெண்களி டையே வேலையின்மை மார்ச் மாதத்தில் பெரிய மாற்றமின்றி நிலையாக காணப்பட்டது. அதே நேரத்தில், கிராமப்புற ஆண்களுக்கான வேலை யின்மை விகிதம் பிப்ர வரி மாதத்தை விட சற்றே அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 35,30 சதவீதத்தில் இருந்து 34.40 சதவீதமாக குறைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *