ஈரான் போர் தாக்கம்: அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்தது!

வாசிங்டன், ஏப். 27- ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மார்ச் 28ஆம் தேதி தாக்குதலை தொடங்கின. இந்த போர் 38 நாட்கள் நடைபெற்றது. அதன் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 வார கால சண்டை நிறுத்த ஒப்பந்தம் அறிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்க ராணு வம் கூறியதாவது: ஈரானில் மொத்தம் 13,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கினோம். ஈரான் போரில்
1,000-க்கும் மேற்பட்ட டொமஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இது அமெரிக்க ராணுவம் ஒவ்வொரு ஆண்டும் வாங்கும் எண்ணிக்கையை விட 10 மடங்கும் அதிகம். ஒரு டொமஹாக் ஏவுகணை யின் விலை 3.6 மில்லியன் டாலர்.

இவை தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் படைத்தவை. ஈரான் போரில்
1,000-க்கும் மேற்பட்ட டொமஹாக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதால், அமெரிக்காவின் டொமஹாக் ஏவுகணையின் கையிருப்பு 3,000-மாக குறைந்துள்ளது. இதேபோல், எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க 1,200 பேட்ரியாட் ஏவுகணைகளை ஈரான் போரில் அமெரிக்கா பயன் படுத்தியது.

இதன் விலை 4 மில்லியன் டாலருக்கு மேலாகும். கடந்தாண்டில் 600 பேட்ரியாட் ஏவுகணை களை மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்தது. மேலும், வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் 1,100 (ஜாஸ்மர்) ஏவுகணைகளையும் அமெ ரிக்க ராணுவம் ஈரான் போரில் பயன்படுத்தியது. இதன் காரணமாக இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத்தில் தற்போது 1,500 மட்டுமே இருப்பில் உள்ளது. இது 600 மைல் தூரமுள்ள இலக்குகளைத் தாக்கும்.

இதன் விலை 1.1 மில்லியன் டாலர். 1,000-க்கும் மேற்பட்ட ஏடிஏசிஎம்எஸ் என்ற தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது. இவ்வாறு அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. ஈரான் போர் காரணமாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் ஆயுதக் கையி ருப்பு குறைந்துள்ளது.

ஈரானின் விலை குறைந்த ட்ரோன் தாக்குதலை சமாளிக்க, அமெரிக்கா அதிக விலை யுள்ள பேட்ரியாட் ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. காலியான ஆயுதங் களை மீண்டும் வாங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு வெகு நாட்களாகும் எனத் தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *