மேற்காசிய போர் பதற்றம் சமையல் எரிவாயு விநியோகம் சீராக 4 ஆண்டுகள் வரை ஆகலாம்

1 Min Read

புதுடில்லி, ஏப்.16 மேற்காசிய போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விநியோக தொடர் சீராக, 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என்று மூத்த ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் அந்த உயரதிகாரி கூறியதாவது: மேற்காசிய போர் சூழ லால் நாட்டின் சமையல் எரிவாயு விநியோகத்தொடரில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப் பட்டுள்ள சமையல் எரிவாயு விநி யோகஸ்தர்களிடம் பேசியபோது, வினியோகத் தொடர் அமைப்பு சரியாக, குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி பாதிப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெளிவாக தெரியவில்லை. இதன் விளைவாக இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் விலை மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

வீடுகளுக்கான எரிவாயு விநியோகத்துக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதுடன் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறது.

எரிவாயு விநியோக தடைகளை சமாளிக்க, கரோனா காலகட்ட மாற்று ஏற்பாடுகள் தற்போது கைகொடுக்கும்.

இறக்குமதி செய்ய குறிப்பிட்ட நாட்டுக்கு பதிலாக, பல்வேறு நாடுகளை சார்ந்திருப்பது, மாற்று கடல் வழித்தடங்களை பயன்படுத்துவது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தேவையை நிர்வகிப்பது ஆகியவையே மாற்று வழிகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *