ரூ. 8,000 கூப்பனில் என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற கணக்கைத் தொடங்கியாச்சு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read

சென்னை, ஏப்.15–- தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

இன்று, கே.வி.குப்பம் தொகுதியில் காலை பரப்புரையின் போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.

அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்? என அவரிடம் கேட்டேன்.

2026 தேர்தலில் ஓட்டுப் பதிவுக்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற கணக்கைத் தொடங்கியாச்சு.

தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த டிஸ்கஷன் தான் ஓடுகிறது.

வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் விருப்பம் ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் ‘இல்லத்து அரசிகள்’, ‘குடும்பத்தலைவிகள்’!

2026 தேர்தலில் “தமிழ்நாடு அணியா – டில்லி அணியா?”என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் ‘பெண்கள்தான்’ எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *