இவரல்லவோ நேர்மையான அதிகாரி கீழடி அறிக்கையில் திருத்தம் செய்யமாட்டேன் அஞ்சாமல் நிற்கும் அமர்நாத் ராமகிருஷ்ணன்

சென்னை, மே 27- கீழடி அகழாய்வு முடிவுகள் தொடர்பாக இந்தியத் தொல்லியல் துறை கோரிய திருத்தங்களை மேற்கொள்ள, தொல்லியல் கண்காணிப்பாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் தொல்லியல் துறை சார்பில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகளை முன்னின்று நடத்தியவர் தொல்லியல் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆவார்.

இரண்டு ஆண்டுகள்

இவர் தனது ஆய்வின் முடிவாக, 982 பக்கங்கள் கொண்ட விரிவான இறுதி அறிக்கையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏ.எஸ்.
அய்.-யிடம் சமர்ப்பித்தார்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அந்த அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அறிவுறுத்தியுள்ளது. அறிக்கையை மேலும் “அறிவியல்பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும்” (அதாவது அவர்கள் விரும்புவது போல அறிககையில் திருத்தம்) மாற்றி மீண்டும் சமர்ப்பிக்குமாறு ஒன்றிய தொல்லியல் துறை கோரியிருந்தது.

“நான் சமர்ப்பித்த அறிக்கையில் எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை.”

ஒன்றிய தொல்லியல் துறையின் இந்த கோரிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் முற்றிலும் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கீழடி என்பது வைகை நதிக்கரையில் உருவான ஒரு மிகச்சிறந்த நகர நாகரிகம் என்றும், இது கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையிலான காலத்தைச் சேர்ந்தது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கியுள்ளார். எனவே, தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையை மாற்றியமைக்கப் போவதில்லை என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இடமாற்றம்

கீழடி அகழாய்வுப் பணிகள் தொய்வின்றி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென அஸ்ஸாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது ஏற்கெனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, அறிக்கை வெளியீட்டில் நீடித்து வரும் தாமதமும், தற்போது அறிக்கையை மாற்றக் கோரும் ஒன்றிய அரசின் அழுத்தமும் தமிழ்நாடு அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த வரலாற்றை மறைக்க/திரிக்க முயற்சி நடப்பதாகப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *