எடப்பாடியார் கூறுவது பதில் அல்ல – பச்சைப்பொய்!- கருஞ்சட்டை

3 Min Read

கேள்வி: நீங்கள் என்னதான் திமுகவை குறை சொன்னாலும், ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் பல துறைகளில் முன்னணி மாநிலமாக இருந்ததாக உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவின் மத்திய அரசே சான்றிதழ் தந்திருக்கிறதே?

பதில்: சான்றிதழைக் காட்டுங்கள் பார்க்கலாம். முதலமைச்சர் அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகளையே நீங்கள் கேள்வியாக்கியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

– ‘இந்து தமிழ்த் திசை’ (12.4.2026 பக்கம் 9)

‘இந்து தமிழ் திசை’ நாளேட்டின் கேள்விக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். இது பதில் அல்ல – பச்சைப்பொய் என்பதுதான் உண்மை!

தமிழ்நாடு அரசின் சாதனைகள்பற்றி ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ளவில்லையா? உண்மை நிலை இதோ!

2021 ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், “திராவிட மாடல்” ஆட்சியின் கீழ் பல்வேறு முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பல திட்டங்கள் ஒன்றிய அரசு மற்றும் அதன் தன்னாட்சி அமைப்புகளான நிதி ஆயோக் (NITI Aayog) ஆகியவற்றின் பாராட்டு களையும், உயர் தரவரிசைகளையும் பெற்றுள்ளன.

ஒன்றிய அரசு மற்றும் தேசிய அளவிலான அமைப்புகள் பாராட்டிய முக்கியமான திட்டங்களின் விவரங்கள்

  1. ‘இல்லம் தேடிக் கல்வி’ கரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெகுவாகப் பாராட்டியது.

‘இது போன்ற ஒரு தன்னார்வலர் அடிப்படை யிலான கற்றல் முறை மற்ற மாநிலங்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டி’ என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டது.

2 லட்சத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் மூலம் சுமார் 34 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கு வீட்டிற்கே சென்று மருந்து வழங்கும் இத்திட்டம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது.

2022-இல் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நடத்திய “பொது சுகாதார அமைப்புகளில் சிறந்த நடைமுறைகள்” குறித்த தேசிய மாநாட்டில் இத்திட்டம் ஒரு முன்மாதிரித் திட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிக மானோர் பயனடைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவுத் திட்டம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் இத்திட்டம் உலகளாவிய கவனத்தைப் பெற்றதுடன், ஒன்றிய அரசின் பல்வேறு கொள்கை முடிவெடுப்பவர்களால் பாராட்டப்பட்டது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகளில் மாணவர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. தெலங்கானா போன்ற மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்ற ஆர்வம் காட்டின.

நான் முதல்வன்

மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தி அவர்களை வேலைவாய்ப்பிற்குத் தகுதியானவர் களாக மாற்றும் இத்திட்டத்தை ஒன்றிய திறன் மேம்பாட்டு அமைச்சகம் கவனித்து பாராட்டி யுள்ளது.

நிதி ஆயோக் மற்றும் ஒன்றிய அரசின் தரவரிசைகள்

ஒன்றிய அரசின் பல்வேறு குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடங்களைப் பிடித்துள்ளது:

SDG (நிலையான வளர்ச்சி இலக்குகள்): நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில், வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகிய பிரிவுகளில் தமிழ் நாடு முன்னிலை மாநிலமாகத் திகழ்கிறது.

நிதி ஆயோக் வெளியிட்ட ‘ஏற்றுமதி தயார்நிலை குறியீடு 2022’-இல் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பிடித்தது.

பெரிய மாநிலங்களின் பட்டியலில் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் இருந்து வருகிறது.

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை நாட்டின் மிகப்பெரிய நேரடி பணப்பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

‘புதுமைப் பெண் திட்டம்’ மாணவிகளுக்கு உயர் கல்விக்காக மாதம் ரூ.1,000 அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளது

மின் ஆளுமை (e-Governance)டிஜிட்டல் சேவைகள் டிஜிட்டல் இந்தியா விருதுகளில் தமிழ் நாடு அரசு பலமுறை விருதுகளை வென்றுள்ளது.

சுகாதாரதுறை திட்டங்கள் குறிப்பாக கருப்பை புற்றுநோய் தொடர்பான தமிழ்நாடு அரசின் தடுப்பூசித்திட்ட்த்திற்கு ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்து மட்டுமல்லாமல், தாங்களே அந்தத் திட்ட்த்தை செயல்படுத்துவதாகவும் அத்தோடு அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்ட்த்தைக் கொண்டுவர மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. (20.02.2026)

பல மாநிலங்களின் அரசுத்துறை செயலாளர்கள் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி வளர்ச்சித்திட்டங்களை நேரில் வந்து ஆய்வு செய்து சென்று அறிக்கையாக வழங்கி பிற மாநிலங்களிலும் தமிழ்நாடு அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

கடல் கடந்த காலை உணவுத்திட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் ‘காலை உணவுத்திட்டம்’ கனடா மற்றும் பிரிட்டன் அரசுகளில் கவனத்தை ஈர்த்து தாங்களும் அந்தத் திட்டத்தினை நடை முறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. (‘தினமலர் 11.03.2025)

எடப்பாடி பழனிசாமி கூறியது பதில் அல்ல  – பல்டியே!  பச்சைப் பொய்யே!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *