பிஜேபி வேட்பாளர் மாட்டு இறைச்சி சாப்பிடக் கூடாதாம்! அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டு இறைச்சி உருவாக்கிய சர்ச்சை

1 Min Read

குவாஹாட்டி, ஏப்.6  அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குவாஹாட்டி மத்திய தொகுதியில் போட்டியிடும் அசாம் ஜாதீய பரிஷத் (ஏஜேபி) கட்சியின் வேட்பாளர் குன்கி சவுத்ரி, மாட்டிறைச்சி சாப்பிடுவதாகக் கூறிள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “அசாமில் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் கேட்டுக் கொண்டதால் முஸ்லிம் மக்கள் கூட, பசுவின் இறைச்சியை சாப்பிடுவதில்லை. அவர்கள் எருமை மாட்டிறைச்சி மட்டுமே சாப்பிடுகின்றனர். அசாமில் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ளது. அதை மீறினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

பசுவின் இறைச்சி சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். அவர்கள் மீது சட்டப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வோம்” என்றார்.

இந்நிலையில் `ஏஜேபி கட்சியே.. திரும்பிச் செல்’ என்ற முழக்கத்தை குன்கி சவுத்ரி எதிர்ப்பாளர்கள் தொகுதி முழுவதும் எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து குன்கி சவுத்ரி கூறும்போது, “இதுபோன்ற காட்சிப் பதிவுகளை உருவாக்குவதற்காக, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஏன் இவ்வளவு பணத்தையும் உழைப்பையும் செலவிட்டு வருகிறது? அவர்கள் வெளியிட்டுள்ள அனைத்து காட்சிப் பதிவுகளும் பொய். அவர்கள் ஒரு காட்சிப் பதிவை விரும்பினால், என் வீட்டுக்கே வரலாம்; நானே எனது வாக்குமூலத்தை காட்சிப் பதிவாக அளிக்கிறேன். பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பமாட்டார்கள்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *