மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு மறுப்பு அய்.ஆர்.டி.ஏ.அய்-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, மார்ச் 25 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (IRDAI) தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புகாரின் பின்னணி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ‘லகு உத்யோக் பாரதி’ என்ற அமைப்பின் தலை வர், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் சார்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

காப்பீடு மறுப்பு: குழந் தைகளின் உடல் குறை பாடுகளைக் காரணம் காட்டி, பல காப்பீட்டு நிறு வனங்கள் அவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கத் தயங்குகின்றன.

காப்பீடு வழங்க முன் வரும் ஒருசில நிறுவனங் களும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத நிபந் தனைகளை விதிக்கின்றன இது போன்ற செயல்கள் மாற்றுத்திறனாளி குழந் தைகளின் நிதி பாது காப்பைக் கேள்விக ்குறியாக்குவதுடன், அவர் களின் அடிப்படை உரிமை களைப் பறிப்பதாகவும் உள்ளது.

இந்த புகாரை ஆய்வு செய்த ஆணையம், உடல் குறைபாட்டை ஒரு காரணமாகக் காட்டி காப்பீடு வழங்க மறுக்கக் கூடாது என்று தெரிவித்தது. இது தொடர்பாக அய்.ஆர்.டி.ஏ.அய் (IRDAI) உரிய வழிகாட்டு நெறிகளை வகுக்க வேண்டும் என்றும், பாதிக்கப் பட்ட வர்களுக்குச் சமமான நிதிப் பாதுகாப்பு கிடைப் பதை உறுதி செய்ய வேண் டும் என்றும் உத்தர விட்டுள்ளது.

மேலும், இந்த விவ காரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது இந்த மனுவை விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை மீறல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், தெலுங்கானாவின் அய்தராபாதில் உள்ள அய்.ஆர்.டி.ஏ.அய்., இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *