சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழலா? பிஜேபி ஆளும் டில்லி ஜல் போர்டு அறிவிப்பால் வெடித்த சர்ச்சை!

1 Min Read

புதுடில்லி, மார்ச் 22 டில்லியில் கட்டுமானப் பணிகளுக்கான தடை யில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவதில் புதிய நடைமுறையை டில்லி ஜல் போர்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 25 சதவீத கட்டணத்தில் தற்காலிக அனுமதி வழங்கும் இந்தத் திட்டம், நிர்வாகச் சீர்திருத்தமா அல்லது ஊழலை முறைப் படுத்தும் செயலா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நேற்றுமுன்தினம் (20.3.2026) நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இனி கட்டுமானத் திட்டங்களுக்கான தற்காலிக என்ஓசி-யை மொத்தக் கட்டணத்தில் 25 சதவீதத்தை மட்டும் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து நீர்வளத் துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

முழுத் தொகையையும் முன்பே செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லாத தால், நிதியின்றி முடங்கிக் கிடக்கும் கட்டு மானப் பணிகள் இனி வேகம் எடுக்கும்.

மீதமுள்ள தொகையைத் திட்டத் தின் பிந்தைய கட்டங்களில் செலுத் திக் கொள்ளலாம். இது வீடு கட்டுபவர் களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு:

“ஊழலின் புதிய வடிவம்” இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டில்லி ஜல் போர்டு ஏற்ெகனவே ஊழல் புகார்களில் சிக்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை “ஊழலைச் சட்டப்பூர்வமாக்கும் முயற்சி” என அவர்கள் விமர்சிக்கின்றனர். “ஒவ் வொரு அனுமதிக்கும் 40 முதல் 60 சதவீதம் வரை கமிஷன் வாங்கும் கலாச் சாரம் ஏற்ெகனவே உள்ளது. இப்போது கமிஷனை நேரடியாகக் கொடுத்து விட்டு அனுமதியை வாங்கிச் செல்லுங்கள் என்று சொல்வது போல இந்த 25 சதவீத விதிமுறை உள்ளது. ஊழலை ஒழிக்க வழியின்றி, அதையே சட்டமாக்கும் ‘மோடி பாணியிலான’ உத்தியை டில்லி அரசும் பின்பற்றுகிறது.” ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் ஜல் போர்டு, இதுபோன்ற சலுகைகள் மூலம் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. அரசின் இந்த “மக்கள் நலன் சார்ந்த” முடிவு, உண்மையில் யாருக்குப் பலன் தரும் என்பது வரும் காலங்களில் தான் தெரியும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *