அமீரகத்தில் போர் குறித்த வதந்தி! 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது!

1 Min Read

அபுதாபி, மார்ச் 18- அய்க்கிய அரபு அமீரகத்தில் போர் தொடர்பாக போலி காணொலிக் காட்சி, வதந்திகளை பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று முன்தினம் (16.3.2026) 17ஆவது நாளாக போர் நீடித்தது. இந்த போரால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. அய்க்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி, துபாய் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க விமானப் படை தளங்கள் செயல்படுகின்றன. இந்த தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும் துபாய் விமான நிலையம், நட்சத்திர விடுதிகள் மற்றும் புஜாயிரா துறைமுகத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்நிலையில், அமீரகத்தில் வசிக்கும் வெளி நாட்டினரில் சிலர் போர் தொடர்பாக சமூக வலைதளங்களில் போலி காணொலி காட்சிப் பதிவுகளை, வதந்திகளை பரப்பியதாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற உள்ளது. பாதுகாப்பு ரகசியங்கள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் போலி காணொலி காட்சிப் பதிவுகளை, வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது என்று அமீரக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதை மீறி போர் தொடர்பாக சமூக வலைதளங்களில் காட்சிப் பதிவுகளை வெளியிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை, ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அமீரக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *