பன்னாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ராஹானேவுக்கு பிசிசியிடம் (BCCI) இருந்து இனி மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியம் கிடைக்கும். முதல்தர கிரிக்கெட் வீரர்கள் ரூ.60,000, அடுத்தநிலை வீரர்கள் ரூ.30,000 ஓய்வூதியம் பெறு கின்றனர். 85 ‘டெஸ்டு’கள் விளையாடியுள்ள ரஹானே முதல்தர (tier 1) பிரிவில் இடம் பெறுகிறார்.
900-க்கு அதிகமான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
‘மேகதாது’ அணை திட்டத்திற்கு
ஆதரவு அளிக்கக் கோரி
ஆதரவு அளிக்கக் கோரி
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கருநாடக பா.ஜ.க. தலைவர் கடிதமாம்!
பெங்களூரு, ஆக.03- மேகதாது அணை திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கருநாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார். “கருநாடகாவில் வாழும் கன்னடர்களும் தமிழர்களும் குடிநீர் தேவைக்கு காவிரியையே நம்பியுள்ளனர். தமிழ்நாட்டின் நியாயமான நீர் தேவையைப் பாதிக்காமல், பெங்களூருவின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய மேகதாது உதவும். அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என கடிதத்தில் வழியுறுத்தியுள்ளார்.
