அமெரிக்கா – நியூஜெர்சியில் முதலமைச்சர் பிறந்த நாள் சிறப்பு!

2 Min Read

தமிழ்நாட்டின் முதலமைச்சர், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா அமெரிக்க மண்ணில் நியூஜெர்சி மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை தி.மு.க. அயலக அணி கிழக்கு அமைப்பாளர் நியூஜெர்சி பாலா ஏற்பாடு செய்திருந்தார். மத்திய அமைப்பாளர் வாசிங்டன் சிவாவும், துணை அமைப்பாளர்களும், அமெரிக்கத் தமிழர்களும் கலந்து கொண்டு மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசு ஏன் வர வேண்டும் என்று கலந்துரையாடினார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த அய்ந்து ஆண்டு களில் நடந்த வளர்ச்சியை அடுத்த பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் எனவும், எந்த காலத்திலும் ஒன்றிய அரசின் பா.ஜ.க. தமிழ்நாட்டில் பரவ விடக்கூடாது என்பதை தெளிவாக எடுத்து கூறினார்கள்.

தொழில் முன்னேற்றத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்ததும், தமிழ்நாட்டில் பல இடங்களில் ‘மினி டைடல் பார்க்’ வந்ததையும், வளர்ச்சி பரவலாக அனைத்து மாவட்டத்திலும் பரவி இருக்கிறது என்பதையும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதையும், கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அரங்கத்தில் வெற்றி பெறுவதை ஊக்கு விக்கும் இந்த அரசையும், மகளிர்க்கு ‘உரிமைத் தொகை’ அளிப்பதன்மூலம் எப்படி அனைத்து விதமான குடும்பங்களை காப்பாற்றி இருக்கிறது என்பதை பற்றியும், மகளிர் பேருந்து, தமிழ்நாட்டில் புதிய புதிய பாலங்கள் வருவது பற்றியும், தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்று அடைந்திருக்கிறது என்பதையும் பகிர்ந்து கொண்டு,  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் வழியில் இந்த ஆட்சி பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுவதாக அனைவரும் பகிர்ந்து கொண்டது மிக சிறப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா வில் இருந்து தமிழ்நாட்டிற்குத் தொலைப்பேசி மூலம் குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களை   அழைத்து ‘‘நீங்கள் மீண்டும் இந்த ஆட்சி தொடர உங்களது வாக்குகள் முக்கியம்’’ என்று   பிரச்சாரம் மேற்கொள்வதாக உறுதி அளித்தார்கள்.

நிகழ்வின் இறுதியில், தமிழ்நாட்டு முதல மைச்சருக்கு கேக் வெட்டி, அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்கள். இதில் துணை அமைப்பாளர்கள் கோசல், ரவி, இளமாறன்,  டாக்டர் ராஜகுமார், சின்னப்பன், கோபி, ஷான், மகேந்திரன், பிரசாத், பிரபு சிவகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *