எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்? தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்! திராவிடர் கழகத் தலைவரின் கருத்து

1 Min Read

தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி  – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை   ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி வைத்து செயல்பட்டுள்ளார்.

மகா மகா வெட்கக் கேடு!

‘வெளிநடப்புக்கென்றே ஓர் ஆளுநரா?’ என்ற கேள்விக்கணை அவரை நோக்கி மக்கள் மன்றத்தில் கிளம்பினாலும் ‘அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்கு எதிராக நடக்கிறோமே’ என்று சற்றும் உணர்வின்றி தொடர்ந்து நடந்து கொண்டு வருவது மகா மகா வெட்கக் கேடு!

இது அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாய கத்தையும் கொச்சைப்படுத்தும் மரபுமீறிய, தரந் தாழ்ந்த கண்டனத்திற்குரிய ஒரு நடவடிக்கையேயாகும்!

தமிழ்நாடு ஆட்சியின்மீது குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்வதற்காகவே ஆளுநர் மாளிகையை போட்டி அரசின் தலைமையிடமாகப் பயன்படுத்துவது சரியானது தானா?

 கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை    
20.1.2026  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *