ஓசூரில் வெட்கக்கேடு விநாயகன் சிலை கரைப்பில் இரு தரப்பினர் கடும் மோதல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ஓசூர், செப்.1 ஓசூர் அருகே விநாயகன் சிலை கரைப்பு விவகாரத்தில் இரு தரப்பினரி டையே மோதல் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில், விநாயகன் சதுர்த்தியை முன்னிட்டு, ஊர் மக்கள் சார்பில் அய்ந்து சிலைகள், மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் ஒரு சிலை என, ஆறு சிலைகள் வைக்கப்பட்டன. நேற்று (31.8.2025) சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். இளைஞர்கள், கோவில் முன் விநாயகன் சிலை ஊர்வலத்தை நிறுத்தி பூஜை செய்ய முயன்றனர். அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இளைஞர்கள் தரப்பை சேர்ந்த தினேஷ், ரமேஷ், சதீஷ், நந்தகுமார், பிரவீன்குமார், விபுன்குமார் என, ஆறு பேரும், ஊர்மக்கள் தரப்பில் பூவரசு, குணா, சுரேந்தர் என, மூவரும் காயமடைந்தனர்.

மற்றொரு தரப்பினர் வைத்திருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால் பெரிய அளவில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். காயமடைந்த ஊர் மக்கள் தரப்பை சேர்ந்த சுரேந்தர் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆபத்தான நிலையில் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இப்பிரச்சினையால் இரு தரப்பினரும் விநாயகர் சிலையை கரைக்காமல் விட்டு சென்றனர். உத்தனப்பள்ளி காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்கின்றனர். அதேபோல, குமரி மாவட்டம், இருளப்ப புரத்தில், நடந்த விநாயகர் ஊர்வலத்திலும் இரு தர்பினரிடையே  மோதல் ஏற்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *