கோவையில் கல்லூரி மாணவர் கொலையைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி போராட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கோவை, ஆக. 14- கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில், இன்று (14.8.2026) தவெக அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக மாணவரணி மாநிலச் செய லாளர் மற்றும் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெற்றோர்
குற்றம் சாட்டினார்

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவன் அமுதன் என்பவர் சக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டதற்கு போதை பொருள் விவகாரம் தான் காரணம் என்று அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டி
னார்.

ஆனால், அந்தக் குற்றசாட்டை காவல் துறையும், கல்லூரி நிர்வாகமும் மறுத்திருந்தது. இந்தச் சூழலில் மாணவன் மரணத்திற்குப் போதை பொருள் நடமாட்டம் தான் கரணம் என வலியுறுத்தி திமுக மாணவரணி போராட்டம் நடத்தினர்.

தவெக அரசின் கவனக் குறைவால் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் போதைப் பொருள் புழக்கத்தைப் பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த மாணவர் அமுதனை, போதை பொருள் கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது. இதனை கல்லூரி நிர்வாகமும், ஆளும் தவெக அரசின் காவல் துறையும் மூடி மறைக்க முயற்சித்து வருகின்றனர்.

இதனைக் கண்டித்து கோவையில் திமுக மாணவர் அணிச் செயலாளர் ஈரோடு ஜெ.வீரமணி உள்ளிட்டோர் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (14.8.2026) காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில், மாணவர் கொலையை மூடி மறைக்கும் தவெகவைக் கண்டித்து திமுக மாணவர் அணியினர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *