குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது விஜய்க்கு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம்!

சென்னை. ஏப். 28- தமிழ் நாடு அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் (Child Rights Observatory) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் விஜய் வெளியிட்ட காணொலி ஒன்றில், குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அடம்பிடித்தாவது தனக்கு (த.வெ.க.-விற்கு) வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

கண்டனத்திற்கான முக்கிய காரணங்கள்:

குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் முன் வைத்துள்ள முக்கிய குற்றச் சாட்டுகள்  ஜனநாயகத்திற்கு எதிரானது: மழலை மாறாத குழந்தைகளைப் பயன்படுத்தி வாக்காளர் களைக் கவர முயற்சிப்பது ஆரோக்கியமான ஜனநாய கத்திற்கு அழகல்ல.

அரசியலில் முடி வெடுக்கும் அதிகாரம் இல்லாத குழந்தைகளை, அரசியல் லாபத்திற்காக ஒரு கருவியாகப் பயன் படுத்துவது அவர்களின் உரிமைகளை மீறுவதாகும்.

குழந்தைகளை முன் னிலைப்படுத்தி அல்லது குழந்தைகளை வைத்து அரசியல் காட்சிப்பதிவுகள் உருவாக்குவதை விஜய் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தச் செயலுக்காக நடிகர் விஜய் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தி யுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, அரசியல் பிரச்சாரங்களில் குழந்தை களைப் பயன்படுத்துவது ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்த அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *