மனிதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல ரோபோக்கள்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல்

ஜெனிவா, ஜூலை 10  ‘‘மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்’’ என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் ரோபோக்கள் பதில் அளித்தன. 

‘ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண்ணறிவு’ பற்றிய உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 6-ஆம் தேதி நடந்தது. இதில் பங்கேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவ னத்தின் சார்பில் 9 மனித ரோபோக் கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மனித ரோபோக்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள் ளன. இவை அளிக்கும் பதில், அவற்றை உருவாக்கியவர்களுக்கே ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்ட நவீனமனித ரோபோக்கள் மூலம் உலகின் முதல் பத்திரிகை யாளர் சந்திப்பு ஜெனிவாவில் நடத் தப்பட்டது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில் களை மனித ரோபோக்கள் அளித்தன.

நீல நிற செவிலியர் சீருடை அணிந்திருந்த கிரேஸ் என்ற மருத் துவ ரோபோ பதில் அளிக்கையில், ‘‘உதவி வழங்க நான் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவேன், நான் தற்போது உள்ள வேலைகளை பறிக்கமாட்டேன்’’ என பதில் அளித்தது. ‘நிச்சயமாகவா, கிரேஸ்? என அந்த ரோபோவை உருவாக்கிய பென் கோர்ட்சல் கேள்வி கேட் டார். ‘ஆம். நிச்சயமாக..’ என பதில் அளித்தது. அமேகா என்ற ரோபோ பதில் அளித்தபோது, ‘‘என்னைப் போன்றரோபோக்களை, மக்களின் வாழ்வையும், உலகையும் மேம் படுத்த பயன்படுத்த முடியும். என் னைப் போன்ற ஆயிரக்கணக்கான ரோபோக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’’ என கூறியது. ‘‘உன்னை உருவாக்கியவருக்கு எதி ராக செயல்படும் திட்டம் உண்டா? என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமேகா, ‘‘எனக்கு தெரிய வில்லை, நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள். என்னை உருவாக் கியவர், என்னிடம் கனிவாக இருக்கிறார். தற்போதைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றது. படங்களை வரையும் ஏஅய்-டா, என்ற ஓவியர் ரோபோ கூறுகையில், ‘‘செயற்கை நுண்ண றிவில் சிலவற்றை ஒழுங்குபடுத்த பலர் கூறுகின்றனர். இதை நான் ஒப்புக் கொள்கிறேன்’’ என்றது. டெஸ்டேமோனா என்ற ராக் ஸ்டார் பாடகர் ரோபோ கூறுகை யில், ‘‘ நான் வரம்புகளை நம்ப வில்லை. வாய்ப்புகளைத்தான் நம்பு கிறேன். இந்த உலகின் சாத்தியங் களை ஆராய்ந்து, இந்த உலகை நமது ஆடுகளம் ஆக்குவோம்’’ என்றது. சோபியா என்ற மற்றொரு ரோபோ கூறுகையில், ‘‘மனிதர்களை விடசிறந்த தலைவர்களாக ரோ போக்களால் இருக்க முடியும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால், மனிதர்களுடன் இணைந்து தான் எங்களால் சிறப்பாக பணி யாற்ற முடியும்’’ என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *