ஸநாதன ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி அளித்தவர் – கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் உள்பட 14 பேர்மீது தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.28 ஸநாதனம் குறித்து கருத்துத் தெரிவித்த 14 பேர்மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
ஸநாதனம் குறி்த்து கருத்துத் தெரி வித்த கீழ்க்கண்ட 14 பேர்மீது சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
பெயர்ப் பட்டியல்
தமிழ்நாடு மாநிலம், முதன்மை செய லாளர், உள்துறை துறை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை, தமிழ்நாடு – 600 009
தமிழ்நாடு மாநிலம், முதன்மை செயலாளர், உயர்கல்வித் துறை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை, தமிழ்நாடு
துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்,
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்,
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர்,
இந்திய அரசு, உள்துறை செயலாளர், புதுடில்லி – 110 001
மத்திய புலனாய்வுப் பிரிவு இயக்குநர், தலைமையகம், உள்துறை அமைச்சகம், புதுடில்லி – 110 003
பி.கே.சேகர் பாபு, இந்து மத மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்,
பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்,
தொல்.திருமாவளவன், மக்களவை உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்,
சு.வெங்கடேசன், மக்களவை உறுப்பினர், மதுரை,
ஆ.இராசா, மக்களவை உறுப்பினர், நீலகிரி தொகுதி,
பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலை ஞர்கள் சங்கம்,
வழக்கு, நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் நேற்று (27.1.2025) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *