விழுப்புரம், ஏப்.15- ‘தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் டில்லி அணியை, தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும்’ என துணை முதலமைச்சர் உதயநிதி பேசினார்.
விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் வெல்வது டில்லி அணியா, தமிழ்நாடு அணியா என்பதை முடிவு செய்து, டில்லி அணியை வீழ்த்துங்கள். தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை. தேர்தலின்போது மட்டும் தமிழ்நாட்டுக்குப் பிரதமர் மோடி வருகிறார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. தமிழ்நாட்டை எல்லா விதங்களிலும் தொடர்ந்து வஞ்சிக்கும் பா.ஜ., சங்கி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.

