ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)
10.01.1948 - குடிஅரசிலிருந்து.... குடியானவர்கள் என்பவர்கள் யார்?பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ…
தந்தை பெரியாரின் குரலை ஒலித்த நேபாளம்
நேபாளத்தில் சி.பி.எம். மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமரானார். நேபாள காங்கிரஸ் தலைமையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய இவர், எதிர்க்கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒலியுடன் கூட்டணி வைத்து…
வேற்றுமை அகல
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும், பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண் டியது முக்கியமானதாகும். ('குடிஅரசு' - 9.11.1930)
உள்ள கோவில்கள் போதாதா?
05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர்…
தி.மு.க. சட்டத்துறை சார்பில் “அரசியல் அமைப்புச் சட்டமும் – ஆளுநரின் அதிகார எல்லையும்” சட்டக் கருத்தரங்கம்:
தமிழர் தலைவர் ஆசிரியர், நீதியரசர் சந்துரு, வழக்குரைஞர் விடுதலை போர் முரசம்!சென்னை, ஜன. 21- திமுக சட்டத்துறை சார்பில் "அரசியல் அமைப்புச் சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்" எனும் தலைப்பில் சட்டக் கருத்தரங்கம் நேற்று (20.1.2023) மாலை சென்னை பெரியார் திடலில்…
நன்கொடை
தென்சென்னை கழகத் தோழர், சைதை மேற்கு பகுதி மு.தெய்வசிகாமணி மற்றும் அவர் மகள் வெற்றிச் செல்வி ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ‘பெரியார் விருது' பெற்றதன் மகிழ்வாக அவருக்குப் பயனாடை அணிவித்தும், விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக…
ராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல்
நாள்: 25.1.2023 புதன்கிழமை, நேரம்; பிற்பகல் 3 மணிஇடம்: சம்பத்துராயன்பேட்டைநோக்கம்: எதிர்வரும்15-2-2023 அன்று அரக்கோணம் வருகை தரும் தமிழர் தலைவரை வரவேற்று பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக... அனைத்துதோழர்களும் அவசியம் பங்கேற்று கருத்து கூறுவது அவசியம்.தவறாமல் பங்கேற்கவும்.சு.லோகநாதன், மாவட்டத் தலைவர் செ.கோபி, மாவட்டச் செயலாளர்
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
வழக்குரைஞர் சுந்தரராஜன், தான் எழுதிய “ஆளுநர் - நேற்று இன்று நாளை” புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் …
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
21.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:இந்த ஆண்டு நடைபெற உள்ள எட்டு மா நில தேர்தலின் முடிவுகள், 2024 பொதுத்தேர்தலுக்கான முடிவை நோக்கி நகர்த்தும் என்கிறது தலையங்க செய்தி. அரசுத்துறையில் 30 லட்சம் நிரப்பப்படாத பதவிகள் உள்ளன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (889)
உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய - மனிதர்களைப் போலவே தோன்றி, வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகும் மற்ற சீவராசிகளுக்கும், புல் பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சி உண்டா? கடவுளைப் பற்றி நமக்கு மட்டும் என்ன கவலை?- தந்தை…
