கோவா சென்றுவிட்டு திரும்பிய திருச்சி வாலிபர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்
திருச்சி, மார்ச் 12 திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு 3 நாட்களுக்குமுன் மீண்டும் திருச்சிக்கு வந்துள்ளார். அதிலிருந்து தொடர் காய்ச்சல், தலை வலியால் அவதிப்பட்டு வந்த அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு…
தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்!
ராமநாதபுரம், மார்ச் 12 தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு – சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தகவல்
புதுக்கோட்டை, மார்ச் 12 மாநிலப் பட்டியலில் 34-ஆவது பிரிவின் படி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உண்டு என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘‘இணைய வழி சூதாட்டத்திற்காக சட்டமன்றத்தில்…
“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டம்
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு நாள் ஊதியம் வழங்குகின்றனர் சென்னை, மார்ச் 12 நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்துக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க உள்ளதாக தமிழ்நாடு கேடர் அய்ஏஎஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.மேனாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல்…
ஆவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் புத்தகக் காட்சி
சென்னை மார்ச் 12 கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு புத்தகம் விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு ஆவடியில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில் அதிக அளவில் விற்பனையை செய்துக்காட்ட…
ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகளை ஆளுநர் ஆதரிக்கிறார் சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
சென்னை மார்ச் 12 ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் அந்த சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்வதை ஆளுநர் ஆதரிக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு…
பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரை
சென்னை, மார்ச் 12 பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (13.3.2023) தொடங்குகிறது. இந்த நிலையில்,பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டலின் அறிவுரை வழ்ங்கியுள்ளார்.இது…
ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு 2021-2022 நிதியாண்டில் ரூ. 1,811 கோடியாக குறைந்த சமையல் எரிவாயு உருளை மானியம்!
புதுடில்லி, மார்ச் 12 ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி, அந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.22 ஆயிரம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக கொடுத்துள்ளது. சமையல் எரிவாயு உருளை விலை தற்போது 1,018…
தெருமுனைக் கூட்டங்கள் – பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடத்த கோவை வடக்குப் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு
கோவை, மார்ச் 12- கோவை வடக்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 8.3.2023 அன்று மாலை 7 மணி யளவில் அஞ்சுகம் நகர் கவி.கிருஷ்ணன் இல்லத்தில் மாவட்ட தலைவர் தி.க.செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் க.வீரமணி,…
மாரவாடி பா.முருகன் மறைவு: கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தருமபுரி, மார்ச் 12- தருமபுரி பெரியார் படிப்பகம், புத்தக நிலைய உதவியாளர் அருணாவின் மாமனாரும், மாரவாடி இளைஞரணி தோழர் மு.அசோக் குமாரின் தந்தையுமான பா.முருகன் அவர்கள் கடந்த 6.3. 2023 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 7.32023 அன்று அவரது உடலுக்கு 12…
