பெரியார் விடுக்கும் வினா! (939)
"சர்வம் கடவுள் செயல்" என்று சொல்லுகிற எவனும் சர்வத்திற்கும் தற்காப்புச் செய்து கொள்ளாமல் இருக்கின்றானா? சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது, நாத்திகன், கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திக்கின்றானா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
செத்த மொழிக்கு உயிரூட்ட ரூ.472 கோடியா?
மக்களிடம் புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தை வளர்க்க, மோடி அரசு மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 இதர மத்திய பல்கலைக் கழகங்களின் துறைகள் மூலம் ரூ.472.01 கோடி நிதியும், ரூ.19.39 கோடி மானியமும் பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக அளிக்கிறது என…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மக்களைத்தேடி மருத்துவ முகாம்
பெரியார் மருந்தியல் கல்லூரியில் திருச்சி சுப்ரமணியபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் சார்பில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் கண்டறியும் மக்களைத்தேடி மருத்துவ முகாம் 28.03.2023 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் மக்களைத்தேடி…
வழக்குரைஞர் த.முத்தப்பா மறைவுக்கு இரங்கல்
சாலியமங்கலம் பெரியார் பெருந் தொண்டர் துரைராஜன் அவர்களின் மருமகனும், திராவிடர் கழகத் தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா ளருமான வழக்குரைஞர் த.முத்தப்பா அவர்கள் நேற்று (28.03.2023) இரவு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர்தம் வாழ்விணையர் மல்லிகா, மகன் அலெக்ஸ்,…
மணமகள் தேவை
புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வயது - 27, படிப்பு பிஇ சிவில் முடித்த, மாதம் 60 ஆயிரம் நிரந்தர வருமானம் உள்ள மணமகனுக்கு கடவுள் மறுப்பாளராக மணமகள் தோழர் தேவை.கைப்பேசி: 8903461202 9865914461
சுவரெழுத்து விளம்பரங்கள்
சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க மாநாட்டுப் பொதுக்கூட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் எழுதப்பட்ட சுவரெழுத்து விளம்பரங்கள் மற்றும் பதாகைகள்.
2ஆம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடக்கம்
விருதுநகர், மார்ச் 29- தாயில் பட்டி, விஜயகரி சல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடங்கியது. சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்தாண்டு செப்டம்பரில் முடிவ டைந்தது. 2ஆம் கட்ட அகழாய்வுப்…
25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் – புதிய புத்தகங்கள் : தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டிலுள்ள 25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளுக்கு வாங்கப்பட வேண்டிய நூல்கள் அடங்கிய பட்டியல் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் ஏதும் வழங்கப் படாத நிலையில், தமிழ்நாடு அரசு இந்த…
400 ஆண்டுகள் பழைமையான வீரக்கல் கண்டெடுப்பு
மதுரை, மார்ச் 29- அருப்புக் கோட்டை அருகே 400 ஆண்டுகள் பழைமையான வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கிராமத்தில் ஒரு பழைமையான சிற்பம் இருப்பதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியை சேர்ந்த வரலாற்றுத்துறை மாணவன் ஜோஸ்வா கொடுத்த தகவலின் படி அக்கல்லூரியின்…
குடிமைப் பணிகளுக்கு ஆட்கள் நியமனம் – தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச் 29- குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந் தெடுக்கும் நடைமு றைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறை யாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது. அத்துடன் குடிமைப் பணி தேர்வை…
‘விடுதலை’சந்தா
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ‘விடுதலை' அரையாண்டு சந்தா ரூ.1000 வழங்கினார்.
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
ஓசூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர் அ.செல்வி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தம் பிறந்த நாள் (20.3.2023) மகிழ்வாக ‘விடுதலை' வளர்ச்சி நிதிக்கு ரூ.1,000 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்
