மாற்றங்கள் என்பவைதான் மாறாதவை!
கடந்த 13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். 1932இல் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு தந்தை பெரியார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் ஈரோட்டில் தனது இல்லத்தில் சுயமரியாதை இயக்கத் தோழர்களையும்…
பெரியார் விடுக்கும் வினா! (990)
ஒரு மனிதன் சமதர்மக் கொள்கைக்காரனாய் இருப்பானானால் அவன் தனது உள்ளத்தில் மற்றொரு மனிதனைத் தனக்குச் சமமாகவும், மற்றொரு மனிதனுக்குத் தான் சமமானவனென்றும் கருதும்படியான ஓர் உணர்ச்சியைக் கொள்ள வில்லையானால் - அல்லது கொள்ளும்படிச் செய்யவில்லையானால் சமதர்மத்தைப் பற்றிப் பேசும் பேச்சு எதற்கு?-…
கேள்விகளுக்குப் பதில் உண்டா?
யார் இந்து விரோதி?1) எல்லோரும் இந்துக்கள் என்றால் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வணங் கும் கடவுள்களான அய்யனாரையும் காத்தவராயனையும் கருப்பசாமியையும் மதுரை வீரனையும் பார்ப்பனர்கள் வணங்குவதில்லையே ஏன்? 2) பெரும்பான்மை மக்களது மேற்கண்ட கடவுள்களுக்கு பூசாரிகளாகப் பார்ப்பனர்கள் வந்து கிடாய்வெட்டிப்…
பொதுவுடைமை பாலபாடம்
"பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்" என்பது பொது உடைமைத் தத்துவத்துக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும் ('குடிஅரசு' - 25.3.1944)
64 தனியார் பள்ளிகளில் உள்ள 380 வாகனங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் ஆய்வு
பெரம்பலூர்,மே29 - பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர்களை ஏற்றி செல்லும் 380 வாகனங்கள் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட…
நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு படுகுழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் குற்றச்சாட்டு
சென்னை, மே 29 - 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் தோல்விகள் சந்தித்ததன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாரதீய ஜனதா அரசு படு குழியில் தள்ளிவிட்டது என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர் பாளர் ராஜீவ் கவுடா…
பகுத்தறிவுப் பகலவன் சிலை நிறுவ- நகராட்சி நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்
ராமநாதபுரம், மே 29 ராமநாதபுரத்தில் 27.5.2023 அன்று மாலை 6 மணிக்கு கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.முருகேசன், ராமநாதபுரம் நகர தலைவர் பழ.அசோகன் , பொதுக்குழு உறுப்பினர் கயல்…
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் – தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை,மே 29 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-ஒன்றிய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நரிக்குறவன், குருவிக் காரன் சமுதாயத்தை தமிழ் நாட் டில் 37-ஆவது இனமாக பழங் குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. அதைத்…
பெரியாரியல் பயிற்சி முகாமில் அதிக மாணவர்கள் கலந்து கொள்வதென கரூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
கரூர், மே 29- கரூர் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 28.5.2023 அன்று மாலை 5 மணிக்கு முத்தலாடம் பட்டி கலை இலக்கிய அணி மாவட்ட அமைப் பாளர் இரா ராமசாமி இல்லத்தில் நடை பெற்றது. கரூர் கழக மாவட்ட…
திருவையாறில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்
திருவையாறு, மே 29- திருவையாறு தேரடி அருகில், திரு வையாறு ஒன்றிய கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் ‘திராவிட மாடல்' ஆட்சி விளக்க தெருமுனைக் கூட்டம் 24.05.2023 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. புரட்சிக்கவிஞர் கலைக்குழு…
