மார்ச் 1 முதல் பிளஸ் 1, பிளஸ் 2 செயல்முறைத் தேர்வு – அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு
சென்னை, ஜன. 31- தமிழ்நாட்டில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் மார்ச் மாதம் நடைபெற…
அதானி குழுமத்தில் முதலீடு எல்அய்சி, எஸ்பிஅய்க்கு ரூ.78,000 கோடி இழப்பு நிதி அமைச்சகம் அமைதி காப்பது ஏன்?
காங்கிரஸ் கிடுக்கிபிடிபுதுடில்லி, ஜன.31 அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடு பட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறு வனம் அறிக்கை வெளியிட் டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடிகள் சரிந்தன. அதானி குழுமத்தில் எல்அய்சி…
குமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் 3800 கிலோமீட்டர் தூர நடைப் பயணம் நிறைவு
சிறீநகர், ஜன. 31- குமரியில் தொடங்கி 3,800 கி.மீ. தூரத்தை கடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்ததுகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப் பயணம், ஜம்மு காஷ்மீரில் நேற்று…
பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் இடமாற்றம்!
காரைக்குடி, ஜன.31 காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை வருவாய் மற்றும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றிய விவகாரத்தில், வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் இடமாற்ற நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர்.காரைக்குடி கோட்டையூர் பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த…
இந்துசமய அறநிலையத்துறையைப் பற்றி பாஜக அண்ணாமலைக்கு என்ன தெரியும்?
சுகிசிவம் பேட்டிசென்னை,ஜன.31- தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத்துறையை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறியுள் ளார். அவரின் இந்த பேச்சை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்துசமய அறநிலையத்துறையை ஒழிப் பது என்ற…
அ.தி.மு.க. கட்சியையே சிலர் ஏலம் விட்டு வருகிறார்கள் – ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை, ஜன. 31- ஜெயலலிதாவின் கட்சியையே சிலர் ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘உங்க ளில் ஒருவன்’தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு…
தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வரவேற்கத்தக்கதே!
மகாராட்டிரம் - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதற்கான, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தலாம்" என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு…
பத்தினி – பதிவிரதை
பத்தினி - பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்தரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களுமல்ல. 'விடுதலை' 4.5.1973
ஆளுநர்கள் செயல்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் தி.மு.க. முறையீடு
புதுடில்லி, ஜன. 31- அனைத்து கட்சி கூட்டத்தில், ஆளுநர்கள் செயல்பாடுகள் குறித்து தி.மு.க., பி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகள் பிரச்சினை எழுப்பின. நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடர் இன்று (31.1.2023) தொடங்குகிறது. இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…
ஆயிரம் விளக்கு மு.சேகர் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 1.2.2023 புதன்கிழமை பிற்பகல் 11 மணி இடம்: சிறீபாலாஜி மினி ஹால் - கீழ்தளம் (பி-1) 3/4, பிள்ளையார் கோயில் தெரு, ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர், சென்னை (காசி திரையரங்கம் பின்புறம்) வாழ்விணையர்: சே.கீ.தமிழரசு - வ.தீபலட்சுமி வரவேற்பு: ப.மகேஷ் (திமுக 113ஆவது வட்ட செயலாளர்) முன்னிலை: பா.அரவிந்தன்தலைமையேற்று…