காதல் கசப்பதானால் காதல் கடவுளை – என்ன செய்ய உத்தேசம்?
போபால் நகரத்தில் பாபுகோனா என்ற பகுதியில் பூங்காவில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த திருமணமான இணையரை காதலர்கள் என நினைத்து ஹிந்து அமைப்பினர் தாக்கியுள்ளனர். "காதலர் நாளைக்கொண்டாடுவது ஹிந்து கலாச்சாரத் திற்கு எதிரானது, காதலர் நாள் அன்று எங்காவது காதலர்களை எங்கள்…
பெண்ணை பெற்றோர் கடமை
உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை செய்ய இஷ்டமா? என்று. 'திருமணத்தில் இஷ்டம்' என்றால் - நல்ல வரனைத் தேடிப் பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டு விடுங்கள்; வேண்டுமானால் ஆலோசனை மட்டும்…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நாள்: 21.2.2023 செவ்வாய்க்கிழமைஅம்மாப்பேட்டைமாலை 5 மணிஇடம்: அரசு மருத்துவமனை சாலை, அம்மாப்பேட்டை, சுயமரியாதை சுடரொளிகள் நெய்க்குன்னம் நடராசன், உடையார்கோயில் புகழேந்தி நினைவு மேடை.வரவேற்புரை: கி.ஜவகர் (அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர்)தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)முன்னிலை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வெ.ஜெயராமன்…
பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் 11.2.2023 அன்று அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது
பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் 11.2.2023 அன்று அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. மு.இரா. மாணிக்கம் வரவேற்புரை வழங்க, வேண்மாள் நன்னன் தொடக்கவுரையை வழங்கினார். புதுமை இலக்கியத் தென்றல் பாவலர் மீனாட்சிசுந்தரம் சிறப்புரை வழங்கினார். அதானி குழுமக் கேடுகளும் ஹிண்டன்பார்க் ஆய்வறிக்கையும் என்ற…
மாவட்ட இளைஞரணி செயலாளர் பு. வினோத் – இளமதி இணையரின் குழந்தைக்கு அறிவுசெல்வன் என தமிழர் தலைவர் பெயர் சூட்டல்
மாவட்ட இளைஞரணி செயலாளர் பு. வினோத் - இளமதி இணையரின் குழந்தைக்கு அறிவுசெல்வன் என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். (தருமபுரி 19.2.2023)
நினைவு நாள் நன்கொடை
தாம்பரம் சானிடோரியம் அழகப்பா உணவகம், படப்பை - ஊரப்பாக்கம் எஸ்.ஆர்.எம் செட்டிநாடு உணவகங்களின் உரிமையாளர், நினைவில் வாழும் தாம்பரம் அ.பாலசுப்பிரமணியன் அவர் களின் இரண்டாம் ஆண்டு (21.2.2023) நினைவுநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக ரூ.1000த்தை குடும்பத்தினர் சார்பாக வழங்கினர்.
எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவிற்கு இறுதி மரியாதை
தஞ்சாவூர், பிப். 20- மேனாள் வணிக வரித்துறை அமைச்சரும், மேனாள் தஞ்சை மாநகர திமுக செயலா ளரும், மாநில திமுக வர்த்தக அணி தலைவருமான எஸ்.என். எம். உபயதுல்லா அவர்கள் 19.2.2023 அன்று உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்,…
பெரியார் உலகத்திற்கு ரூ.25,000/-
வேதபுரி - பரிமளா குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேதபுரி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: கரு.பாலன்.
விடுதலை வாழ் நாள் சந்தா
தமிழர் தலைவரிடம் எஸ். பிரபாகரன் - மஞ்சுளாதேவி இணையர் விடுதலை வாழ் நாள் சந்தா ரூ.20,000த்தை வழங்கினர். (அரூர், 19.2.2023)