உடல் நலம் விசாரிப்பு
மேட்டுப்பாளையம் கழக மாவட்ட காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது அவருடைய இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். தகவல் அறிந்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நேரில்…
47-வது சென்னை புத்தகக்காட்சி-2024 (03.01.2024 முதல் 21.01.2024 வரை)
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) நடத்தும்47-வது சென்னை புத்தகக் காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: தி-26 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு (தி-26)…
பெரியார் விடுக்கும் வினா! (1200)
தேர்தல் காலங்களில் திருட்டு ஓட்டுப் போடாமல் இருப்பதற்காகக் கையில் மையினால் அடையாளம் செய்தோம். ஆனால் எப்படியோ தந்திரமாக அதை அழித்துப் போட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து ஓட்டுப் போட்டு விடுகிறார்கள். செத்துப் போனவர்கள் கூட வந்து ஓட்டு போட்டு விட்டுப்…
“என்றும் தேவை நம் பெரியார்” சேலத்தில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
சேலம், டிச. 31- தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி சேலம் பகுத்தறிவாளர் கழ கம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 28.12.2023 அன்று தமிழ்ச்சங்க க இராசாராம் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் ப க மாவட்ட செயலர்…
தென்சென்னை தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு
திராவிடர் கழக இளைஞரணி தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதி ஏற்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டியதோடு தென் சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி , வடசென்னை…
அயன்சிங்கம்பட்டியில் திராவிடர்கழக கிளை தோற்றம்
நெல்லை, டிச. 31- திருநெல்வேலி மாவட்டம் அயன்சிங்கப்பட்டியில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவுநாளன்று (24.12.2023) திரா விடர்கழக புதிய கிளை தொடங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி தலைவர் முன்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். கழகக் காப்பாளர் இரா.காசி,மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட மாணவர் கழக தலைவர்…
கன்னியாகுமரியில் பெரியார் நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம்
நாகர்கோயில், டிச. 31- நாகர்கோவில் ஒழு கினசேரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம் குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக நடை பெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் சிறப்பு ரையாற்றினார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத்…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
மலேசியா திராவிடர் கழக தோழர்கள் தா.பரமசிவம், க. மணிமேகலை, பா.கதிர் செல்வி, ச.பொற்கொடி பா. கண்ணன், பத்துமா, க.புர்விந்திரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (28.12.2023,சென்னை).
2023ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
ஜனவரி ஜன. 9: ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையில் ரூ.600 கோடியில் 3ஆவது டைடல் பூங்கா, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் உள்ளிட்ட திட்டங்கள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அறிவிக் கப்பட்டன. ஜன.…
