ராமன் கோயில் திறக்குமுன்பே அச்சுறுத்தலா?
இந்தூரில் உள்ள மால் மற்றும் வியாபாரக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ராமன் கோயிலின் மாதிரியை வைக்க வேண்டுமென இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் கூறியுள்ளார். அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமன் கோயில் திறப்பு விழா மற்றும் குட…
தந்தை பெரியார் பொன்மொழி
♦ நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. ♦ சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞாமாகும்.
பெண்களும் – கற்பும்
பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும். ("குடிஅரசு", 3.11.1935)
கழகத்தின் களப் பணிகள்
தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு: வேப்பம்பட்டி - அரூர் அரூர் கழக மாவட்ட திராவிடர்…
இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?
10.03.1935 -குடிஅரசிலிருந்து.. 6. சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். - அ.8. சு. 271. 7. சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன்…
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் திராவிட திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும்
கொரட்டூர்: மாலை 6:00 மணி •இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர்வண்டி நிலைய சாலை, கொரட்டூர் • சிறப்பு விருந்தினர்கள்: பா.தென்னரசு, த.வ.லால், வெ.கார்வேந்தன், கு.சங்கர் • அழைப்பு: இரா.கோபால்.
13.1.2024 சனிக்கிழமை தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா
புத்தகரம்: காலை 10:30 மணி • இடம்: தந்தை பெரியார் படிப்பகம், புத்தகரம் • வரவேற்புரை: இராச.முருகையன் (மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்) • தலைமை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட கழக செயலாளர்) • முன்னிலை: செல்வ.செங்குட்டுவன் (திரு மருகல் வடக்கு…
விடுதலை வளர்ச்சி நிதி
சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை சுப்பையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை (12.1.2024) முன்னிட்டு, சிவகங்கை மணிமேகலை சுப்பையா மூலம் ரூ.5,000 விடுதலை வளர்ச்சி நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (பெரியார் திடல், 9.1.2024)
நன்கொடை
கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் ம.சுப்பராயன் பெயர னும், சு.சதீஷ்குமார்-பிரியதர்ஷினி இணையரின் மகனுமான பெரியார் பிஞ்சு ச.மகிழன் 5ஆவது பிறந்தநாள் (12.1.2024) மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடையாக கல்லக் குறிச்சி ம.சுப்பராயன் வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!
அப்பா – மகன்
எடப்பாடி பழனிசாமி அறிவாரா? மகன்: அயோத்தி ராமன் கோவில் கும் பாபிஷேகத்தில் வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறாரே, அப்பா! அப்பா: அப்படி என்றால், கும்பாபிஷேகத்திற்கு அழைப்பிதழ் வரவில்லை என்று அர்த்தமா, மகனே! ‘தீ பரவட்டும்!' என்ற…
