இது என்ன அரசியல் நாகரிகம்? சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையா உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசையை கண்டிப்பதற்கான களம்? விசித்திர பா.ஜ.க. கோஷ்டி சண்டை?

சென்னை, ஜூன் 13 ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள காட்சிப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பதவியேற்பு

சென்னை, ஜூன் 13 விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பதவியேற்று கொண்டார். அவருக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜயதாரணி விலகியதால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு…

Viduthalai

காவிரி டெல்டா படுகையில் பருவமழைக்கும் முன்பாக தூர்வார வேண்டும்

அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல் சென்னை, ஜூன் 13 பருவமழைக்கு முன்பாக காவிரி டெல்டா படுகையில் தூர்வாருதல் போன்ற அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்…

Viduthalai

ஜூன் 20 முதல் 29 வரை தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம்

அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு சென்னை, ஜூன் 13 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை - மாலை என இரு…

Viduthalai

விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்யவும் கண்மாய்களில் இலவசமாக மண் எடுக்கலாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜூன் 13 மாநில மெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து…

Viduthalai

சென்னை தேசிய முதியோர் நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சேவை தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 12-தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (11.06.2024) சென்னை, கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மய்யத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையினை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்…

viduthalai

அயோத்தியில் பெரியார் வெற்றி பெற்றார்!

அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில் அகிலேஷ் யாதவ் கட்சிக்காரர் - இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றார். சம்பூகன் வெற்றி பெற்றார் - இராமன் தோற்றுப் போனான். இதுதான் புதிய ராமராஜ்ஜியம், ஜனநாயக ராஜ்ஜியம்…

Viduthalai

இனியும் தேவையா ‘நீட்’ தேர்வு? திராவிட மாணவர் கழகத்தின் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

நாள்: 18.06.2024, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி இடம்: வள்ளுவர் கோட்டம் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு. நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தலைவர், திராவிடர் கழகம் தோழர்களே, மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக நீதி உணர்வாளர்களைப் பெருமளவில்…

Viduthalai

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிக்குமார் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். (சென்னை – 11.6.2024)

Viduthalai

கோட்டைக்குள் விரிசல்! மோடியின் மதவாதப் பிரச்சாரமே எங்கள் மகாராட்டிராவில் பின்னடைவிற்குக் காரணம் மராட்டிய முதலமைச்சர் ஏக்னாத்ஷிண்டே

மும்பை, ஜூன் 12 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் மதவாதப் பிரச்சாரம்தான் மகாராட்டிராவில் பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்க காரணம் என அம்மாநில முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…

Viduthalai

பா.ஜ.க. அய்.டி. பிரிவு தலைவர்மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

பா.ஜ.க கட்சியின் அய் டி பிரிவு தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பணி மேற்பார்வையாளராக இருந்துள்ளார். அப்போது பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது…

Viduthalai

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியை சார்ந்த வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.…

Viduthalai