கோவிலில் யோகாவிற்கு மறுப்பு
திருக்கழுக்குன்றம், ஜூன் 25- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் வேதகிரீஸ்வரர் கோவிலின் மலையடிவாரத்தில் பக்தவத்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாக பகுதியில், தனியார் அமைப்பினர், சமய நிகழ்ச்சிகள், யோகா உள்ளிட்ட வற்றை, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி…
‘நீட்’ தேர்வு முறைகேட்டை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டு தேசிய தேர்வு முகமைத் தலைவர் மாற்றம்: முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பு – மாணவர்கள் அலைக்கழிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 2017 ஆம் தொடங்கி இந்தியாவில் நீட் தேர்வு முறை இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் 2016ஆம் ஆண்டு இறுதியிலேயே நீட் தேர்விற்கு எதிரான…
தேர்வை ரத்துசெய்வதற்கு பதிலாக பா.ஜ.க. ஆட்சியையே ரத்து செய்யுங்கள்- அகிலேஷ்
லக்னோ, ஜூன் 25- தேர்வுகளை ரத்து செய் வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்வதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரி வித்தார். நெட், முதுநிலை நீட் தேர்வுகளை ஒன்றிய அரசு ஒத்திவைத்த நிலையில் அகிலேஷ்…
சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த உறுப்பினர்களின் கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க உரை
சட்டமன்றத்தில் இன்று! சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (25.6.2024), திருநெல்வேலி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு, திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட்…
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழிப் பயிற்சி தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, ஜூன் 25- செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள் ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழிகளில் இலவசமாக பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின்…
ஒன்றிய அரசின் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் குறித்து கார்கே விமர்சனம்
புதுடில்லி, ஜூன் 25- ஒன்றிய அரசு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக விமர் சித்துள்ளார். சமீபத்தில் நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வு களில் முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில்…
இருமூலை கிராமத்தில் பெரியார் பெருந்தொண்டருக்கு சிறப்பு
பெரியார் பெருந்தொண்டர் திருவிடைமருதூர் வட்டம் இருமூலை கிராமம் நாத்திகர். இலா .சுந்தரராஜன் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாளை (16.6.2024) முன்னிட்டு அவருக்கும் அவரது வாழ்விணையருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மீன்சுருட்டி நகர தலைவர்…
ஜூன் 25 (1931) சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள்
பத்தாண்டுகள் உறங்கிக் கிடந்த பிற்படுத்தப்பட்டோரின் உரிமைச் சாசனமான மண்டல் குழு பரிந்துரைக்கு, புத்துயிர் அளித்து, ஒன்றிய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27% இட ஒதுக்கீடு ஆணைப் பிறப்பித்தார். அதற்கான விலையாக பிரதமர் பதவியையும் துறந்த மாமனிதர். ”ஆயிரம் ஆண்டு பழைமை நிறைந்த…
பெரியார் விடுக்கும் வினா! (1356)
குழந்தைகள் பிறந்த பின் அவைகளையும், அரசாங்கத்தின் சொந்தச் சொத்தாகவே கருதி அரசாங்கம் அவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளைக் காக்க வேண்டுமே - அவர்களுக்குப் படிப்புக் கொடுக்க வேண்டுமே - அதற்குப் பின் வேலை தேடித் தர வேண்டுமே என்ற கவலை…
முதுபெரும் பெரியார் தொண்டர் காரைக்குடி ச.அரங்கசாமி மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
காரைக்குடி ஜூன் 25- காரைக்குடி கழக மாவட்ட மேனாள் தலைவர் ச.அரங்கசாமி 24-06-2024 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வுகள் வீர வணக்க கூட்டம் தலைமைக் கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர்…
