மாணவரின் புத்தகத்தில் ஜாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பத்தூர், நவ.29 திருப்பத்தூா் அருகே மாணவரின் புத்தகத்தில் ஜாதிப் பெயரை எழுதிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலா் மலைவாசன் உத்தரவிட்டார். திருப்பத்தூரை அடுத்த குனிச்சி மோட்டூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 100-க்கும்…
அரிய சாதனை தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு
சென்னை, நவ.29- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 564 இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறி உள்ளார். தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியாவிலேயே முதன்முறையாக 1989-1990ஆம் ஆண்டில் உழவர்களுக்கு இலவச…
மசூதிகளை தோண்டி பார்ப்பது தான் அன்றாட பணியா? தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, நவ.29 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீா் தா்கா, சிவன் கோயில் மீது கட்டப்பட்டுள்ளதால் அதைக் கோயிலாக மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தா்கா குழு, ஒன்றிய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம்,…
ஜார்க்கண்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!
ராஞ்சி, நவ.29 ஜார்க்கண்டின் 14 ஆவது முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று (28.11.2024) பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் மொராபாடி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோர னுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப்…
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574 கோடி வழங்கப்பட வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் ராஜேந்திரன் நேரில் கோரிக்கை
சென்னை, நவ.29 தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று (28.11.2024) டில்லியில் ஒன்றிய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தமிழ்நாடு…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவிப்பும் – தோழர்களின் ஆயத்தமும்!
கேரளத்தில் ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவை’’யொட்டி, தமிழ்நாடு அரசால் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவகம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு, புதிய கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தை 12.12.2024 அன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தலைமையில், சமூகநீதிக்கான…
பள்ளி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டின் தீமை குறித்த கட்டுரைப் போட்டி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை, நவ.29- தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி விளையாட்டு தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக கட்டுரைப்போட்டி…
பாராட்டத்தக்க தீர்ப்பு! குடியிருப்புகள் வழியாக உடல்களை எடுத்துச் செல்ல தடை கோரிய மனு–அபராதத்துடன் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சென்னை, நவ.29 இறந்தவர்களின் உடல்களை குடியிருப்புகள் வழியாக எடுத்துச் செல்லாமல், பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லக் கோரிய மனுவை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விருதுநகர் மாவட்டம் பனையாடிபட்டி கிராமம் கம்மவார் சமூக நலச் சங்கச் செயலர்…
நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகள் – கேள்விகள்!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது மற்றும் விவாதங்கள் நடத்தாமல் அவை ஒத்திவைக்கப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து பின்வருமாறு பேசியுள்ளார். ‘‘பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருகிறார். அங்கு…
வக்பு சட்டத்திருத்த மசோதா பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம் அறிஞர்கள் இடம்பெறும் சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் திருச்சி, நவ.29- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகி தீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது, வக்பு சட்டத்திருத்த மசோதா பிரச்சினைக்குத்…
