கருஞ்சட்டை
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு நரேந்திர மோடி அளித்த வைர மோதிரத்தின் மதிப்பு 20 ஆயிரம் அமெரிக்க டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 17 இலட்சம்! இந்த தகவலை அமெரிக்க அரசு தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது
இந்த வைரத்தின் விலையை 13.07.2023 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டபோது, ‘‘அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பொருளின் விலையை வெளியிட்டால், அது அந்த நாட்டுடனான உறவைப் பாதிக்கும்; ஆகையால், விலை மதிப்பை வெளியிட முடியாது’’ என்று 2023 ஆம் ஆண்டு மோடி அலுவலகம் பதிலளித்திருந்தது.
டோனால்ட் டிரம்ப் மனைவிக்கு 50,000 டாலர் மதிப்புள்ள வைரத்தைக் கொடுத்துள்ளார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 45 லட்சம் ரூபாயாம்.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பக்கம்.
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் ஒரு கோடி பேர் இடைநிற்றல் – வறுமைக்கோட்டின்கீழ் மக்கள் – விவசாயி களின் வேதனைப் போராட்டம் உச்சகட்டம்! இந்த லட்சணத்தில் ஏழை நாடான(?) அமெரிக்க அதிபரின் மனைவிக்கு இந்திய அரசு சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பில் வைர மோதிரமாம்!
எப்படி இருக்கு?