கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராகுலின் எம்.பி. பதவி ரத்து விலக்கிக் கொண்டதை யடுத்து, மீண்டும் துக்ளக் சாலையில் வசித்த அதே வீடு ஒதுக்கப்பட்டது.
* மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் தொடங்கியது. மணிப்பூர் முதலமைச்சர் பதவி விலக வேண்டும். ‘மவுன பிரதமர்’ என காங்கிரஸ் விமர்சித்ததால் கடும் அமளி
* பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது.
* டில்லி நிர்வாக திருத்த மசோதாவிற்கு மாநிலக் கட்சிகள் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு தந்ததன் மூலம் நிறைவேறியுள்ளது என்கிறது தலையங்க செய்தி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* டில்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நாள், ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம்.
– குடந்தை கருணா