வருந்துகிறோம்

1 Min Read

சென்னை கொளத்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் தாராளசந்திரன் (வயது 62). வருமான வரித்துறையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 16.5.2024 அன்று திருச்சியில் உற வினர் ஒருவர் இல்ல துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனியார் ஆம்னி பேருந்தில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அருகே நேற்று (17.5.2024) அதிகாலை 3 மணியளவில் ஓட்டுநர் டீ குடிப்பதற்காக பேருந்தை சாலையோர ஓட்டலில் நிறுத்தினார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த தாராள சந்திரன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த சக பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தாராளசந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். மறைவுற்ற தாராளசந்திரன் பத்திரிகையாளர் ரேவதி அவர் களின் கணவராவார். அவரின் மறைவுக்கு வருந்துகிறோம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *