பிஜேபி அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையர் கைப்பாவையா? மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 30-  பாஜக ஆட்டி வைக்கும் கைப்பாவையாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டு வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டில்லியில் நேற்று (29.9.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகள் தன்னிச்சையானவை மற்றும் தவறானவை என்று சக தேர்தல் ஆணையர்கள் இருவரே விமர்சனம் செய்துள்ளனர்.

ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் வகையில்தான் தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் இருந்தன. அது இப்போது நாடு முழுவதும் தெரிந்த விஷயமாகி விட்டது. அவர் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளார். இத்தகைய சூழலில், அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை; அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் சார்பில் 5 முக்கிய கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கப்படுகின்றன. முதலாவதாக வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்கள் தொடர்பான தரவுகளையும் பகிரங்கமாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இரண்டாவது, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். மூன்றாவது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியலை எளிய வடிவில், உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

நான்காவது, தீவிரமான முறைகேடுகள் கண்டறியப்படும் இடங்களில், குறிப்பிட்ட காலவரையறைக்குள் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். இறுதியாக, தகவல் மறைக்கப்படுகிறது என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாத வண்ணம் தேர்தல் நடைமுறைகளை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்ற வேண்டும்.

தேர்தல் ஆணையத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் தருவதாகக் கூறப்படுகிறது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையருடன் அவருக்கு அழுத்தம் கொடுத்ததற்காக பிரதமர் மோடியும் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *