கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் நாகர்கோவில் வடசேரி பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள்,பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னுராசன்,தொழிலாளரணி அமைப்பாளர் கருணாநிதி, கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர் . தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.
மூடநம்பிக்கை ஒழிப்பு துண்டறிக்கை பிரச்சாரம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
