செங்கிப்பட்டியில் தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனை கூட்டம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செங்கிப்பட்டி, டிச. 30- 26.12.2023 அன்று மாலை 6 மணி யளவில் செங்கிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் பூதலூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் இறுதி முழக்கம் – 50 ஆவது ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட் டம் பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு தலைமையில் நடை பெற்றது.
தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, மாநில மாணவரணி செயலாளர் இரா.செந் தூரபாண்டியன், காவிரி சமவெளிபகுதி விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பொறியாளர் சு.பழனிவேல்ராஜன் ஆகியோர் முன்னிலை யேற்று உரையாற்றினர்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜ வேல், உங்களுக்காக நாங் கள் தொண்டு நிறுவன தலைவர் இரா.பிரதீப், சிறிமி ஒன்றிய செயலா ளர் சி.பாஸ்கர், வி.சி.க பொறுப்பாளர் அ.விடு தலைவேந்தன், இந்திய தேசிய காங்கிரசு கட்சி ஆண்டவர், திமுக மாவட்ட பொரியாள ரணி அமைப்பாளர் பொன் க.லெனின், ம.தி.மு.க. ஒன் றிய செயலாளர் ரா.நந்தக் குமார், மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பா ளர் ஆசிரியர் கோபு.பழனிவேல் அகியோர் கருத்துரையாற்றினர்.

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தெரு முனைக் கூட்டத்தை தொடங்கிவைத்து உரை யாற்றினார். திராவிடர் கழக மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.
மாவட்ட ப.க. செயலா ளர் பாவலர் பொன்னரசு இயக்க பாடல்களை பாடினார். பொதுக்குழு உறுப்பினர் குரும்பூண்டி மு.சேகர் வர« வற்புரை யாற்றினார். பூதலூர் ஒன்றிய செயலாளர் ரெ. புகழேந்தி நன்றியுரை யாற்றினார். மருத்துவக் கல்லூரி பகுதி செயலா ளர் பா.விஜயக்குமார் நிகழ்வினை ஒருங்கி ணைத்தார்.
மாவட்ட ப.க. துணை தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், பூதலூர் நகர செயலாளர் ம.செல்ல முத்து, பூதலூர் ஒன்றிய ப.க. தலைவர் ப.துரைராசு, தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா. இள வரசன், தஞ்சை மாநகர ப.க. செயலாளர் இரா.வீரக்குமார், திராவிடர் கழக தோழர்கள் திருக் காட்டுப்பள்ளி அ.இஸ் மாயில், சிவசாமிபிரபு, திருச்செனம்பூண்டி அருமை கி.நாகராஜன், தஞ்சை மாநகர இளைஞ ரணி துணை தலைவர் அ.பெரியார்செல்வம், மகளிரணி தோழர்கள் சகாயராணி அந்தோனி சாமி, சுசீலா, பெரியார் பிஞ்சுகள் சின்னையன், மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *