ஒன்றிய, மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனம் சார்பில் கிராமப்புற பெண்களுக்கு 4 மாத செவிலியர் உதவியாளர், ஆடை வடிவமைப்பு, தையல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை, தங்குமிடம், உணவு, பாடப்புத்தகங்கள், சீருடைகள் இலவசம். பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழுடன் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, அடிப்படை கணினி பயிற்சி, ரூ.4 லட்சத்திற்கான இலவச காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது. 5 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள், ஆதார், குடும்ப அட்டை, ஜாதி, கல்விச் சான்று, வங்கி கணக்குப் புத்தகம் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். விவரங்களுக்கு 98421 57155ல் தொடர்புகொள்ளலாம்.
