தமிழர் தலைவர் அவர்களின் 94ஆம் பிறந்த நாளில் 94 விடுதலை சந்தாக்களை வழங்குவோம்! சிவகங்கை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

1 Min Read
- Advertisement -

சிவகங்கை, நவ. 22–  சிவகங்கை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 20.11.2026 அன்று மதியம் 2 மணிக்கு பொதுக் குழு உறுப்பினர் இரா.புகழேந்தி இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.அனந்தவேல் தலைமை ஏற்று உரையாற்றினார்.

தீர்மானங்கள்:-

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேளாள் தலைவர், பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கிறது.

14.11.2026 அன்று தஞ்சையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்! என்ற பெரும் பணியை சுமந்து ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று ஒவ்வொருவரும் 3 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என்றும் 94 சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக மாவட்ட கழகம் சார்பில் வழங்கி மகிழ்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவாக ஆசிரியர் அவர்கள் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் அறிமுக விழாவினை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

திராவிடர் கழகக் காப்பாளர் ச.இன்பலாதன் முன்னிலையேற்று உரையாற்றினார்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் பரிசாக மாவட்டத்தின் சார்பில் குறைந்தது 94 சந்தாங்களை வழங்க வேண்டும் என்று கூறி உரையாற்றினார்.

பொதுக் குழு உறுப்பினர் இரா. புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.இராசாங்கம், மாநில திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு. இளமாறன், மாநில மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலெட்சுமி, இளம் வழக்கறிஞர் தோழர் மு.விஷ்வா ஆகியோர் கருத்துரை வழக்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *