சிவகங்கை, நவ. 22– சிவகங்கை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 20.11.2026 அன்று மதியம் 2 மணிக்கு பொதுக் குழு உறுப்பினர் இரா.புகழேந்தி இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.அனந்தவேல் தலைமை ஏற்று உரையாற்றினார்.
தீர்மானங்கள்:-
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேளாள் தலைவர், பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கிறது.
14.11.2026 அன்று தஞ்சையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்! என்ற பெரும் பணியை சுமந்து ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று ஒவ்வொருவரும் 3 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என்றும் 94 சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக மாவட்ட கழகம் சார்பில் வழங்கி மகிழ்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவாக ஆசிரியர் அவர்கள் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் அறிமுக விழாவினை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
திராவிடர் கழகக் காப்பாளர் ச.இன்பலாதன் முன்னிலையேற்று உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் பரிசாக மாவட்டத்தின் சார்பில் குறைந்தது 94 சந்தாங்களை வழங்க வேண்டும் என்று கூறி உரையாற்றினார்.
பொதுக் குழு உறுப்பினர் இரா. புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.இராசாங்கம், மாநில திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு. இளமாறன், மாநில மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலெட்சுமி, இளம் வழக்கறிஞர் தோழர் மு.விஷ்வா ஆகியோர் கருத்துரை வழக்கினர்.
