கோவை, அக். 28 அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு அனைத்து முற்போக்குக் கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது 4-ஆம் நாளாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் 24.10.2026 அன்று மாலை 4.00 மணிக்கு கோவை மாவட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், ஆகிய தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
25.10.2026 அன்று மாலை 4.00 மணிக்கு 5-ஆம் நாளாக அகிலனின் பெற்றோர் அசோக்குமார், கவுசல்யா, மற்றும் உறவினர்கள் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடினார்கள் அப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சந்தித்து குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் வழக்குரைஞர் அணி மாநிலச் செயலாளர். கோபி மாவட்ட கழகத் தலைவர் மு.சென்னியப்பன், கோவை மாவட்ட கழகச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், திராவிட மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர் ப.திலகவதி, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த.சிவபாரதி, கோபி மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா, உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
