காவிரிப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுங்கள்! தீர்மானம் நிறைவேற்றிப் பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!

1 Min Read
- Advertisement -

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை, நவ. 21– காவிரிப் பிரச்சினையில் த.வெ.க. அரசின் இரண்டு மனுக்களும் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை யடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். காவிரி நீருரிமையை நிலைநாட்ட முதல மைச்சரே என்ன செய்திருக்கிறீர்கள் எனவும், தவிக்கும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் பதில் என்ன என்றும், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்ப வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:–
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டுமனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடி யாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறை வேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்க ளது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *