தஞ்சாவூர் மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள கழகப் பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்றோர்.
உரத்தநாடு பெரியார் வளாகம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர் மற்றும் தோழர்கள் வரவேற்றனர்

சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (தி.மு.க.), ஆர். வைத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மா. சேகர் (உரத்தநாடு ஒன்றிய பெருந்தலைவர்), முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்.

பெரியார் வளாகம் மற்றும் படிப்பகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கட்டுமான நிறுவன தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து தந்தை பெரியார் படத்தினை வழங்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், கட்டுமான தோழர்கள் மற்றும் திட்ட இயக்குநர் முனைவர் உ.பர்வீன், வங்கி மண்டல மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் ப. சீதாராமன், கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சே.தமிழ்ச்ெசல்வன்.
