தி.மு.க. அரசு அமைத்த ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு’’
தமிழ்நாட்டு த.வெ.க. அரசுக்கு
எந்த வகையில் ஏற்க முடியாத ஒன்று?
சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
தமிழ்நாட்டு த.வெ.க. அரசுக்கு
எந்த வகையில் ஏற்க முடியாத ஒன்று?
சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
சென்னை, நவ.13 தி.மு.க. அரசு அமைத்த ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு’’ தமிழ்நாட்டு த.வெ.க. அரசுக்கு எந்த வகையில் ஏற்க முடியாத ஒன்று?
- தி.மு.க. அரசு அமைத்த ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு’’ தமிழ்நாட்டு த.வெ.க. அரசுக்கு எந்த வகையில் ஏற்க முடியாத ஒன்று? சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
- தி.மு.க. அரசு அமைத்த “ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு” வைக் கலைத்தது சரிதானா? மாநில உரிமைகளை அடகு வைப்பதா?
- கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
- சிறப்பான அறிக்கைக்குக் காரணமான மூவர்களிலே ஒருவர்!
- ‘திராவிட மாடல்’ ஆட்சியினால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு!
- உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து சிறப்பான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி குரியன் ஜோசப்!
- நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கை – தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல!
- பல முதலமைச்சர்கள், இதை ஒரு ‘வழிகாட்டி’ (கைடு) என்று பாராட்டுகிறார்கள்!
- பூஞ்ச்சி ஆணையம் – சர்க்காரியா ஆணையம்!
- ஒவ்வொரு பிரச்சினைகளில் உள்ள சிக்கலையும் சொல்லி, தீர்வையும் தந்திருக்கிற ஒரே ஆணையம்!
- எந்த வகையில் இப்போது இருக்கிற தமிழ்நாட்டு அரசுக்கு ஏற்க முடியாத ஒன்று?
ஒவ்வொரு பிரச்சினைகளில் உள்ள சிக்கலையும் சொல்லி, அதற்குத் தீர்வையும் தந்திருக்கிற ஒரே ஒரு ஆணையம் இதுதான்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
தி.மு.க. அரசு அமைத்த “ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு” வைக் கலைத்தது சரிதானா? மாநில உரிமைகளை அடகு வைப்பதா?
நேற்று (12.11.2026) மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம் – தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில், தி.மு.க. அரசு அமைத்த ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு’’ வைக் கலைத்தது சரிதானா? மாநில உரிமைகளை அடகு வைப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கழகத் தலைவர் ஆசிரியர்
சிறப்புரை
சிறப்புரை
அவரது சிறப்புரை வருமாறு:
மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தாலும், அறிவார்ந்த அரங்கமாக, பல வழக்கு ரைஞர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்கள் எல்லோரும் அடங்கிய இந்தச் சிறப்பான கூட்டத்தின் தலைவர் அவர்களே, திட்டக்குழு மேனாள் துணைத்தலைவர் என்று பேராசிரியர் மு.நாகநாதன் குறித்து அழைப்பிதழில் போட்டிருக்கிறார்கள், அதைவிட இன்னாள் உயர்நிலைக் குழுவினுடைய மூன்று உறுப்பினர்களிலே இவர் மிக முக்கியமானவர். அப்படிப்பட்ட மூன்று உறுப்பினர்கள், அற்புதமானவர்கள்; ‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’’ என்று ஆக்கியவர் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய திராவிட நாயகர் அருமைச் சகோதரர் நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆவார்.
சிறப்பான அறிக்கைக்குக் காரணமான மூவர்களிலே ஒருவர்!
இந்த அறிக்கை சிறப்பான ஒரு பணி அது. வேகமாக செய்திருக்கிறார்கள். அதற்கு இது முதல் கட்டம். இந்த அரங்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் புத்தகங்களைத் தூக்கித் தூக்கிக் காட்டுவது போன்று, இவ்வளவும் படிக்க ஆரம்பித்தால், அதைப்பற்றி விவாதம் செய்ய ஆரம்பித்தால் பல மணி நேரமாகும். அப்படிப்பட்ட இந்தச் சிறப்பான அறிக்கைக்குக் காரணமான மூவர்களிலே ஒருவர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள்..
‘திராவிட மாடல்’ ஆட்சியினால்
நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு!
நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு!
எனக்கு முன் உரையாற்றிய பெருமக்கள் மிகச் சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. இன்றைக்கு எவை எவையெல்லாம் தமிழ்நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறதோ, எவற்றிற்கெல்லாம் அரசியலில் தீர்வு காண முடியாத நிலை இருக்கிறதோ, கல்வியிலே தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறதோ அவற்றுக்கெல்லாம் நல்ல மாமருந்து போல; கப்பல்கள் திணறுகிற நேரத்திலே அந்தக் கப்பல்கள் எப்படி போக வேண்டும்? என்று அந்த இருட்டை எல்லாம் விலக்கி, வெளிச்சம் காட்டக்கூடிய கலங்கரை வெளிச்சம் போல, ‘திராவிட மாடல்’ ஆட்சியினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு இருக்கிறது; இக்குழு சிறந்த வழிகாட்டி. இவர்கள் அரசியல் சார்பானவர்கள் அல்ல; பேராசிரியர் நாகநாதன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உரியவராக இருந்திருக்கலாம். அவர் தி.மு.க. என்பதற்காக அல்ல, அவர் பொருளியல் நிபுணர் என்பதற்காகத்தான் திட்டக்குழு துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர், தி.மு.க.வை விரும்புகிறார், தி.மு.க.வில் இருக்கிறார். அது அவரவருடைய சொந்த விருப்பம், கட்சிக் கண்ணோட்டத்தில். இன்னும் சொல்லப்போனால், தி.மு.க.வில் இருக்கிறவர்களுக்கு ஓர் அறிவு நாணயம் உண்டு, திராவிட இயக்கத்தில்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து சிறப்பான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி குரியன் ஜோசப்!
குரியன் ஜோசப் அவர்கள், கேரளப் பகுதியைச் சார்ந்தவராக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து சிறப்பான தீர்ப்புகளை வழங்கியவர். அதுபோல் நம்முடைய அசோக்வர்தன் (ெஷட்டி) அவர்கள், எல்லா துறைகளிலும் வல்லுநர். பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தராக இருந்தவர். சரி செய்ய முடியாத கோளாறுகள், பல்கலைக்கழகங்களில் இருந்தபோது, அதற்கு தீர்வு கண்டவர். அதுமட்டுமல்ல, அவருடைய கருத்துகள், முற்போக்கானவை.
அப்படிப்பட்ட அற்புதமானவர்களை, சிறந்தவர்களை அடையாளம் கண்டு, மு.க.ஸ்டாலின் அரசு – ‘திராவிட மாடல்’ அரசு அந்தக் குழுவை உருவாக்கியது.
நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கை – தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல!
அந்த உயர்மட்டக் குழு, இந்தக் குறுகிய காலத்திலே, இவ்வளவு பெரிய அறிக்கையை, முதல் பகுதியாக கொடுத்திருக்கிறது. இந்த அறிக்கையிலே இருக்கக்கூடிய செய்திகள், எங்கெங்கே சிக்கல் இருக்கிறதோ, அந்தச் சிக்கல்களை எல்லாம் சொல்லி இருக்கிறது. நோய் நாடி நோய் முதல் நாடி இருக்கிறார்கள். இவ்வறிக்கை யாருக்கும் விரோதமானது அல்ல! இது ஒரு கட்சி சார்பானதல்ல! இது அரசியல் சார்பல்ல! தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல! மாநில உரிமைகள் என்றால், அது பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களுக்கு உட்பட கிடைக்கும் உரிமைகள்தானே!
பல முதலமைச்சர்கள், இதை ஒரு ‘வழிகாட்டி’ (கைடு) என்று பாராட்டுகிறார்கள்!
இன்றைக்கு யார் ஆளுகிறார்கள்? என்பது முக்கிய மல்ல! நாடு எப்படி ஆளப்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு, அரசியலமைப்புச் சட்டம் எப்படி அமைந்தது என்பதை முன்னாலே வைத்து, அதற்கெல்லாம் கலங்கரை வெளிச்சமாக இருக்கின்ற காரணத்தினால்தான், நம்முடைய அருமைச் சகோதரர் தோழர் பரந்ததாமன் அவர்கள் சொன்னதைப் போல, பல முதலமைச்சர்கள், இதை ஒரு ‘வழிகாட்டி’ (கைடு) என்று பாராட்டுகிறார்கள். இதிலே கட்சிக் கண்ணோட்டம் தேவையில்லை. வேறு ஓர் ஆட்சி வந்துவிட்டதே, என்பதற்காக இக்குழுவைக் கலைப்பதை அறிவுள்ளவர்களால் ஏற்க முடியாது. அதை நன்றாக, ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
பூஞ்ச்சி ஆணையம் – சர்க்காரியா ஆணையம்!
இங்கே மூன்று ஆணைகளைப் பற்றிச் சொன்னார். என்னிடம் காட்டியபோது சொன்னேன், ‘‘பரவாயில்ல, இது வேறு எதற்குப் பயன்படுகிறதோ, இல்லையோ! இந்த இரண்டு ஆணையமும் (பூஞ்ச்சி ஆணையமும், அதற்கு முன்னால் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.சர்க்காரியா ஆணையமும்) கனமான அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன், அதைக் கைகளால் தூக்கி, இறக்கினால் நம் போன்ற வர்களுக்கு நல்ல அளவிற்கு உடற்பயிற்சியாகும் – உள்ளத்துக்குப் போகவில்லை என்றாலும் என்று விளக்கமாகச் சொன்னேன்.
ஒவ்வொரு பிரச்சினைகளில் உள்ள சிக்கலையும் சொல்லி, தீர்வையும் தந்திருக்கிற ஒரே ஆணையம்!
அவையெல்லாம் ஏட்டுச் சுைரக்காயாகக் கருதப்பட்டு விட்டன. இன்னொரு சிறப்பு. ராஜமன்னார் குழுவினை நம்முடைய கலைஞர் அவர்கள் அமைத்து, வழிகாட்டியவர். அதற்கு யார் காரணம் என்பதையும் அழகாகச் சொன்னார் நம்முடைய பேராசிரியர் நாகநாதன் அவர்கள். அந்த இரண்டு கமிஷன்களான ஆர்.எஸ். சர்க்காரியா கமிஷன் ஆனாலும், பூஞ்ச்சி கமிஷன் ஆனாலும் அவற்றில் நிலைமைகளை விளக்கிச் சொல்லிவிட்டுப் போனார்களே தவிர, தீர்வுகளைச் சொல்லவில்லை. ஒவ்வொரு பிரச்சினைகளில் உள்ள சிக்கலையும் சொல்லி, தீர்வையும் தந்திருக்கிற ஒரே ஒரு கமிஷன் – ‘திராவிடமாடல்’ ஆட்சி அமைத்த குரியன் தலைமையில் அமைத்த ஆணையம்தான். இதை, நாம் சொல்லவில்லை. அந்தக் குழுவின் தலைவரே சிறப்பாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே, இவ்வளவு ஆழமாக, குறுகிய காலத்தில், காலத்தை வீணாக்காமல், அரசாங்கத்தினுடைய பணத்தையும் வீணாக்காமல், அருமையானவர்களை அழைத்து, சிறப்பான பணியை ‘திராவிட மாடல்’ அரசின் திராவிட நாயகர் மு.கஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார்.
எந்த வகையில் இப்போது இருக்கிற தமிழ்நாட்டு அரசுக்கு ஏற்க முடியாத ஒன்று?
இது எந்த வகையில், இப்போது இருக்கிற தமிழ்நாட்டு அரசுக்கு ஏற்க முடியாத ஒன்று? இதுதான் இப்போது கேள்வி. எந்த அடிப்படையிலே, அவர்கள் இந்த ஆணையத்தைக் கலைக்கிறேன் என்று சொன்னார்கள். அதைத்தான் நான் இப்போது உங்களுக்குச் சொல்லு கிறேன். ஏனென்றால், இந்த அறிக்கையில் இருக்கிற செய்திகள் எல்லாம் முக்கியமானவை – ஆளுநர் ஏன் வேந்தராக இருக்கக் கூடாது? என்பது உள்பட இதற்கு அரசியல் ரீதியான பதில் இல்லை, சட்ட ரீதியான வரலாற்றுப் பதில் இந்த ஆணைய அறிக்கையில் உள்ளது.
(தொடரும்)
