குற்றவாளிகளுக்கு அச்சமே இல்லை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

4 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 11- “ஒரே நாளில் 17 கொலைகள் நடந்துள்ளன. பகுதி நேர முதலமைச்சராகவும், முழு நேர கன்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கும் விஜய்க்கு பொறுப்பே இல்லை” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக ஊடக ‘எக்ஸ்’ பதிவில், ‘தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு அய்சியு-வில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளது. ஒரே நாளில் 17 கொலைகள் நடந்துள்ளன.

சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை. காவல் துறையினருக்குப் பாதுகாப்பில்லை. தவெகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை.

மொத்தத்தில், பகுதி நேர முதலமைச்சராகவும், முழு நேர கன்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கும் விஜய்க்கு பொறுப்பே இல்லை’ என தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு தகவல்

தமிழ்நாடு

சென்னை, நவ. 11- தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் கே.சாந்தி நேற்று (10.11.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜெர்மனியில் பிசியோதெரபிஸ்ட், கார் தொழில்நுட்ப வல்லுநர் (Car Technician), வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் (Commercial Technician), லாரி ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதியுடன் ஜெர்மன் மொழியில் தேர்ச்சியும் அவசியம்.

தகுதி உள்ளவர்கள் தங்களது சுய விவரம் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வித் தகுதி, அனுபவம், கடவுச்சீட்டு நகல்கள், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தையும் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் நவ.15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளம் (www.omcmanpower.tn.gov.in) மற்றும் 044-22502267 என்ற கைப்பேசி எண், 6379179200 மற்றும் 9566239685 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு ஊதியம், பணி விவரங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் ஆணையத் தலைவராக
மேனாள் நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமனம்

சென்னை, நவ. 11- தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன், கடந்த மார்ச் மாதம் மரணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக இருந்தது. நீண்ட காலமாக தலைவர் பதவி காலியாக இருந்ததால் இப்பணியிடத்தை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா உச்சிமலை குப்பம் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தலைவர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் நிரப்பப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எம்.வி.முரளிதரன் 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். அதன்பின்பு மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார். இதைத்தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் பணி ஓய்வு பெற்றார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள மணியம்பட்டு கிராமம் ஆகும்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வெங்கட்ரமண அக்கராஜு பொறுப்பேற்றுக் கொண்டார்

சென்னை, நவ. 11– இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வெங்கடமண அக்கராஜு பொறுப் பேற்றார். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செம்மஞ்சரியில் அமைந்துள்ளது. இதன் வளாகங்கள் சென்னை, உத்தண்டி, கொச்சி, கொல்கத்தா, நவி மும்பை, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில், மரைன் இஞ்சினியரிங், நாட்டிக்கல் சயின்ஸ், நேவல் ஆர்க்கிடெக்ட் சர், துறைமுக மேலாண்மை உள்ளிட்ட கடல்சார் பொறியியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 6 ஆண்டு காலம் பணியாற்றி வந்த முன்னாள் அய்ஏஎஸ் அதிகாரி மாலினி சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதைத்தொடர்ந்து, துணைவேந்தர் பதவி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கடல்சார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வெங்கடமண அக்கராஜு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். மும்பை துறைமுகத்தில் 15 ஆண்டுகள் இஞ்சினியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த அவர், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் முதன்மை பொறியாளராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இறுதியாக மர்ம கோவா, நியூ மங்களூரு துறைமுக ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *