ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்: வளப் பகுப்பாய்வாளர் பணிக்கு வாய்ப்பு!

1 Min Read
- Advertisement -

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க வள பகுப்பாய்வாளர் பணிக்கு வாய்ப்பு. இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

வள பகுப்பாய்வாளர்கள்

தமிழ்நாடு அரசு சமூக நீதி துறையின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க சமூக நீதித்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் (temporarily on contract basis) 5 வள பகுப்பாய்வாளர்கள் (Resource Analyst) தகுதியுடைய பணிநாடுநர்களிடமிருந்து விருப்ப கோரிக்கை (Expression of Interest -Eol) வரவேற்கப்படுகிறது.

பொறுப்புகள்

திட்ட கண்காணிப்பு அலகில் பணியமர்த்தப்படும் வள பகுப்பாய்வாளர்கள் (Resource Analyst) தலைமைச்செயலக துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தகுந்த பயனாளிகளை சென்றடைவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மாவட்டம், வட்டம் மற்றும் கிராம அளவில் ஆராய்ந்து அதனை களைவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

மாதம் ரூ. 30,000

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க உருவாக்கப்படும் திட்ட கண்காணிப்பு அலகிற்கு குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதிகள் மற்றும் கள முன்அனுபவம் கொண்டவர்களை மாதம் ரூ. 30,000/- ஊதியம் மற்றும் ரூ 10,000/- இதர படிகள் என்ற அளவில் வெளிப்பணி முகமை மூலம் வள பகுப்பாளர்கள் (Resource Analyst) நியமனம் செய்யப்படுவர்.

இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் உரிய முன்மொழிவு படிவத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26-11-2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவல்களுக்கு https://www.tnadw.tn.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு: T.Muthuvalliyappa PA to Director (ADW) 7338801242, Kumaran, Research Officer, MEC 8608953516, Social Justice Department, N.Vivekanandan, Superintendent 7338801297 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *