கல்வி என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை. ஆனால், ஒரு நாட்டின் குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உயர்கல்வி நிறுவனத்தைக் கேட்கும்போது, அரசாங்கத்தின் பதிலடி யாக அடி-உதை, கைது மற்றும் நீண்ட சிறைவாசம் கிடைக்குமேயானால் “கல்வி கேட்பது குற்றமா?” என்ற நியா யமான கேள்வி கோபத்தோடு எழுகிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட பீகார் மாநி லத்தில் தற்போது அரங்கேறி வரும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் இந்த கசப்பான உண்மையைத்தான் நம் கண்முன்னே நிறுத்துகின்றன.
நிதிப் பகிர்வும்–
மாறாத வறுமை நிலையும்
ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்க ளுக்கான நிதிப் பகிர்வில் மற்ற மாநி லங்களை விட பீகார் அதிக நிதியைப் பெறுகிறது. இருப்பினும், அம்மாநிலத்தின் சமூகப் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமாகவே நீடித்து வருகிறது. மக்களின் வறுமை நிலையைப் போக்குவதற்கும், இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளி மயமாக்குவதற்கும் பயன்பட வேண்டிய நிதியும் அதிகாரமும், அங்குள்ள எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டிய அரசாங்கமோ, ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
நாளந்தா கல்லூரி இடமாற்றமும் மாணவர் கிளர்ச்சியும்
பீகாரில் இந்திய மாணவர் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்களின் பய னாக, நாளந்தா மாவட்டத்தில் புதிய கல்லூரி ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாயின.
ஆனால், உள்ளூர் சட்டமன்ற உறுப்பி னரின் அரசியல் அழுத்தத்தின் காரண மாக, கல்லூரி அமையவிருந்த இடம் நாளந்தாவில் இருந்து லோடிபூருக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது.
மக்களுக்கான கல்வி நிறுவனம் அரசியல் ஆதாயங்களுக்காக மாற்றப்படுவதைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு உடனடியாகக் களத்தில் இறங்கியது. இந்திய மாணவர் சங்கத்தின் பீகார் மாநிலத் தலைவரும், மத்திய குழுவில் உள்ள அனைவரையும் விட மிக இளம் தலைவருமான மாணவி காந்தி குமாரி மற்றும் நாளந்தா மாவட்டச் செயலாளர் சாவித்திரி குமாரி ஆகியோர் தலைமையில் மாணவர்கள் 15 நாள்கள் தொடர் பட்டி னிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண வர்களின் உணர்ச்சிமிக்க இந்தப் போராட்டம், நாளடைவில் அப்பகுதி பொதுமக்களின் உரிமைப் போராட்டமாக மாறியது.
காவல்துறையின் கொடூர அடக்குமுறையும் 40 நாள்கள் சிறைவாசமும்
அமைதியான வழியில் நடைபெற்ற இந்த மக்கள் போராட்டத்தை சகித்துக் கொள்ள முடியாத மாவட்ட நிர்வாகமும் பீகார் பாஜக கூட்டணி அரசின் காவல்துறையும் வலுக்கட்டாயமாகப் போராட்டத்தைக் கலைக்க முயன்றன. போராட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்திய காவல்துறை, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களான காந்தி குமாரி, சாவித்திரி குமாரி உட்பட 42 மாணவத் தோழர்களைக் கொடூரமான முறையில் இழுத்துச் சென்று கைது செய்தது.
காந்தி குமாரி மிக இளம் வயதே ஆன மாணவி என்ற போதிலும், தன் பகுதிக்கான கல்வி உரிமையை மட்டுமே கோரி நின்ற ஒரே காரணத்திற்காக, 40 நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டி ருந்தார். அரசு மற்றும் காவல்துறை யின் கடும் அடக்குமுறைகள், உடல்ரீதி யான இன்னல்கள் மற்றும் நீண்ட சிறைவாசத்தைக் கடந்து அவர் பிணையில் விடுதலையாகியுள்ளார். இந்த 40 நாள்கள் சிறைத் தண்டனை அவரது போராட்ட குணத்தையோ, மாணவர் நலனுக்கான உறுதியையோ சிறிதும் தளரச் செய்யவில்லை.
பாட்னாவில் எழுச்சிமிகு
பாராட்டு விழா
இந்த அடக்குமுறைகளையெல்லாம் தாண்டி உறுதியோடு நின்ற காந்தி குமாரி, சாவித்திரி குமாரி உள்ளிட்ட மாணவப் போராளிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பாட்னாவில் நடைபெற்ற எழுச்சிமிகு வரவேற்பு நிகழ்ச்சியில், 40 நாட்கள் சிறையில் வாடிய நாளந்தா மாவட்டத்தின் 8 இளம் இந்திய மாணவர் சங்க மாண வர்களும், டில்லி ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்ட பாட்னாவின் 3 மாணவர்களும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே மற்றும் பீகார் மாநிலக் கட்சித் தலைவர்களால் ஆரத்தழுவி வரவேற்கப்பட்டனர்.
கவுரவிக்கப்பட்டவர்களில் இந்திய மாணவர் சங்கத்தின் பீகார் மாநிலத் தலைவர் காந்தி குமாரி, அவரது இரு சகோதரிகளான காயத்ரி குமாரி மற்றும் சாவித்திரி குமாரி மற்றும் தோழர்களான மோனி குமார், சூரஜ் குமார், சாகர் குமார், சோனு குமார், சுதான்சு குமார் ஆகியோர் அடங்குவர். மேலும், பாட்னாவைச் சேர்ந்த விவேக் ரஞ்சன் யாதவ், முகமது சாகிப் மற்றும் அமைய் ஆத்மன் ஆகியோரும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தேவதத் குமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சி யில் டாக்டர் அசோக் தாவ்லே உரை யாற்றுகையில், “வெற்றி பெற்ற டில்லி மாணவர் போராட்டத்தின் முக்கியத்து வத்தையும் அதன் எதிர்காலச் சாத்தி யங்களையும்” விளக்கினார். சிபிஎம் பீகார் மாநிலச் செயலாளர் லல்லன் சவுத்ரி தலைமை தாங்கிய இந்நிகழ்வில், மாநிலத் தலைவர்களும், பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அஜய் குமார் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிகார அத்துமீறலும், எதிர்காலப் போராட்டமும்
பா.ஜ.க-வின் ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சி நடைபெறும் பீகார் போன்ற மாநிலங்களில், மக்களின் அடிப்படை உரிமைகளும் கல்விச் சுதந்திரமும் இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகின்றன என்பதற்கு இந்த இளம் மாணவர்களின் கைதும் சிறைவாசமும் சித்ரவதைகளும் சான்றாகும்.
கல்வி கேட்ட இளம் மாணவர்களை 40 நாள்கள் சிறையில் அடைத்து வைத்த செயல், பீகார் மாநில பாஜக கூட்டணி அரசின் அதிகார அத்துமீறலையும், ஜனநாயகத்தின் மீதான அச்சத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தோழர் காந்தி குமாரியின் விடுதலை மாணவர் சமூகத்திற்குப் புதிய நம்பிக்கையை அளித்திருந்தாலும், நாளந்தாவிலேயே கல்லூரியை அமைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை இந்த உரிமைப் போராட்டம் ஓயப்போவதில்லை என்பதை இந்திய மாணவர் சங்கம் உறுதிபடத் தெரிவிக்கிறது.
