ஆச்சரியத்தில் ஆழ்த்திய
ஆசிரியர் அய்யா அவர்கள்…
திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த, பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா சிறப்பாக நிறைவடைந்ததும், ஆசிரியர் அவர்களுடன் ஓர் ஒளிப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆசையில் அவரிடம் சென்றேன்.
அப்போது, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலில் சென்னையில் சந்தித்ததை அவராகவே நினைவுகூர்ந்தார்.
ஏற்கெனவே அவரது உரையைக் கேட்டு, 94 வயதிலும் இத்தனை தெளிவாகவும், ஆழமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் ஒருவரால் எப்படிப் பேச முடிகிறது என்று வியப்பில் ஆழ்ந்திருந்தேன்
பல லட்சம் மனிதர்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் கடந்து வந்திருக்கும் அவர், நம்முடைய அந்த ஒரு நிமிடச் சந்திப்பைக்கூட நினைவில் வைத்திருந்து நினைவுகூர்ந்தது என்னை மேலும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
வயது என்பது வெறும் எண் என்பதை உணர்த்திய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு என் அன்பும், மரியாதையும், நன்றியும்!
– டாக்டர் கோகிலா மணி,
திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் (அவிநாசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் 2026)
