கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.11.2026

- Advertisement -

டெக்கான் ஹெரால்டு:

* லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர் கொலைகளுக்குக் காரணமான சங் பரிவார் அமைப்பினர் சிறையில் அடைக்கப்படுவர்: பிரியங்க் கார்கே உறுதி. கொலை வழக்குகள் முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தீபாவளி அத்துமீறிய கொண்டாட்டம்: தமிழ்நாட்டில் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – முதலமைச்சர் விஜய் ரூ.40 லட்சம் துயர் துடைப்பு நிதி அறிவிப்பு. தேனியில் பட்டாசு வெடிப்பது தொடர்பான தகராறில் தாக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கே. செந்தில்குமார் (56) உயிரிழந்தார்; மேலும் பல இடங்களில் பட்டாசு வெடிப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “பட்டாசுச் சத்தத்தை விட பட்டாக் கத்திகள் சத்தமே அதிகம்” – தேனி எஸ்.எஸ்.அய். மரணம் தொடர்பாக விஜய்யை சாடிய உதயநிதி: முதலமைச்சர் விஜய்யை “டம்மி முதலமைச்சர்” என விமர்சித்த உதயநிதி, கைதிகள் தப்பித்தல், காவலர்கள் கொல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு சீர் குலைந்திருப்பதை காட்டுவதாகக் குற்றச்சாட்டு.

தி இந்து:

* அயோத்தி படித்துறைகளில் விளக்குகளில் இருந்து எண்ணெய் சேகரிக்கும் ஏழைகள் – உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன் சர்ச்சை: ஏழை மக்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக பாஜக அரசை அகிலேஷ் கடுமையாகச் சாடினார். ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் மூலம் கடுகு எண்ணெய் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

* ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம். 2027 மே மாதத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கவிருந்த உயர்நிலைக் குழுவை கலைத்தது ஏமாற்றமளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். குழுவின் கருத்துகளையும் பங்களிப்பையும் அரசால் ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் கூறினார்.

* 88 நாட்களாகியும் மக்களவை கூட்டத்தொடர் முடிவுற செய்யாத ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம். மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு 88 நாட்கள் ஆகியும் முறைப்படி கூட்டத்தொடர் முடிவுறச் செய்யப்படாதது, தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை திரட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவகாசம் அளிக்கும் திட்டம் என ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 2027 வரை நிறுத்தி வைப்பு – ஒன்றிய அரசிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இன மோதல்கள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு பாதிப்புகள் தொடர்வதால், மணிப்பூரில் 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை 30.04.2027 வரை நிறுத்திவைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *