டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜூனில் இந்தியா கூட்டணி கூட்டம் மம்தா தகவல். பாஜகவை வீழ்த்துவதற்கான கூட்டு வியூகம் பற்றி விவாதிக்க அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடக்கிறது என மம்தா கூறியுள்ளார்.
* நீட் தேர்வு ரத்து எதிரொலி: 12 நாட்களில் 5 மாணவர்கள் தற்கொலை.
* கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தோற்றம், இளைஞர்களிடையே வேலையின்மை பிரச்சினையின் எதிரொலி, பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் பாஜக விமர்சனத்திற்கு மாறாக கருத்து.
தி இந்து:
* ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை காங்கிரஸ் ஓயாது: ராகுல் காந்தி. “தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையிலும், நீட் போன்ற தேர்வு வினாத்தாள் கசிவுகளை தடுப்பதற்கான ஒரு முழுமையான, பிழையற்ற அமைப்பு உருவாக்கப்படும் வரையிலும் நாங்கள் ஓயமாட்டோம்,” என்று ராகுல் காந்தி தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
* பிரதமர் மோடி இதுவரை ஒரே ஒரு திறந்த பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தாதது வருந்தத்தக்க உண்மை: இந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் (EDITORS GUILD OF INDIA) வருத்தம்.
தி டெலிகிராப்:
* ‘நெருங்கிய நண்பரை திருப்திப்படுத்தும்’ முயற்சி: ரூபியோவின் 500 பில்லியன் டாலர் வர்த்தக கூற்று தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ‘மக்கள் விரோதமானது’ மற்றும் ‘ஆபத்தானது’, அதனை நிராகரிக்கும் துணிவை மோடி அரசு ஏன் வெளிப்படுத்தவில்லை என தகவல் தொடர்புப் பிரிவு பொறுப்பாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
* ஆர்.எஸ்.எஸ்.-உடன் தொடர்புடைய ”ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச்” பிரதிநிதிகளுக்கு பள்ளிகளில் தங்கு மிடம் அளிக்க 72 அரசுப் பள்ளிகள் டில்லியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன; பொதுக் கல்வி நிறுவனங்களின் வசதிகளை இவ்வாறு பயன் படுத்துவது ‘முறைகேடான செயல்’ என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
– குடந்தை கருணா
